This Article is From Nov 15, 2018

கஜா புயல்: உஷார் நிலையில் இந்திய கடற்படை!

கஜா புயல், தென் தமிழகத்தின் கடற்கரை அருகேயுள்ள மாவட்டங்களையும் புதுவையிலும் இன்று மாலையில் இருந்துதாக்க தொடங்கும்

Advertisement
தெற்கு Posted by

கஜா புயல், தென் தமிழகத்தின் கடற்கரை அருகேயுள்ள மாவட்டங்களையும் புதுவையிலும் இன்று மாலையில் இருந்துதாக்க தொடங்கும். புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பாக்கபடும் நிலையல் எச்சரிக்கை நடவடிக்கையாகஇந்திய கடற்படை சார்பாக மிட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

ஈஸ்டொர்ன் நேவல் கமாண்டு(ஈ.என்.சி) வீர்ரகள் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிவாரண பணிகளில்ஈடுபட தயாராக உள்ளதாகவும், ரன்வீர் மற்றும் கான்ஜார் என அழைக்கப்படும் இரண்டு இந்திய கப்பல்களில், புயலால்மிக மோசமாக பாதிக்கப்படும் பகுதிகளில் இருக்கும் மக்களை மீட்க ரெடியாக இருக்கிறது. அதேபோல மிகவும்தேவைப்படும் முதலுதவி பொருட்கள், ரப்பர் படகுகள், ஹெலிகாப்ட்டர்கள், மருத்துவர்கள், ஓட்டுநர்களை மற்றும் இதரஅவசர கால பொருட்களான உணவு, கூடாரம், போர்வைகள் அக்கப்பல்லகளில் உள்ளதாகவும் அதிகாரபூர்வமாக தகவல்வெளியிடப்பட்டுள்ளது கடற்படை.

மேலும் படிக்க - "கஜா புயல் எதிரொலி… இன்று எந்தெந்த இடங்களில் கனமழை?"

Advertisement

மேலும் முன்னெச்சரிக்கையாக தேகா, ராஜாலி மற்றும் பாருந்து என்று அழைக்கப்படும் நேவல் விமான தளங்களும்தயார் நிலையில் உள்ளதாகவும், ராம்நாடு மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களை கண்கானிபதற்காக தண்ணீரில்அதிவேகமாக செல்லும் (ஜெட் வகை) படகுகளும் துறைமுகம் அருகே தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல்தெரிவித்துள்ளது கடற்படை.

ஈ.என்.சி புயலின் தாக்கத்தை மிக கவனமாக கண்கானித்து வருவதாகவும் தமிழ்நாடு மட்டும் புதுவையில் உள்ள அரசுஅதிகாரிகள் களத்தில் இருக்கும் வீர்ரகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அங்குள்ள நிலைமயை கண்கானித்துவருவதாக கூரினர். மேலும் பீ8ஐ (P8I) எனப்படும் டோரினியர்ர வகை விமானங்களும் ஹெலிகாப்டர்களும்பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேறுவதர்கும், அவசர உதவிக்கும், உணவுப் பொருட்களை தரவும் தயாராக உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ள உள்ளது.

Advertisement

 

மேலும் படிக்க - ‘கஜா' புயல்: முக்கியமான 10 தகவல்கள்!

Advertisement

கஜா புயலால் பாம்பன் மற்றும் கடலூரில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் 20,000 மக்களை அங்கிருந்து வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமையன்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் வி.அன்புசெல்வன் புயலால் மிகவும் பாதிப்புக்குள்ளாகும் எனமுன்னர் அறிவிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்டு பார்வையிட்டார். மேலும் அம்மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும்தனியார் பள்ளிகளுக்கும் புயல் முடியும் வரை விடுமுறை அளித்துள்ளார்.

Advertisement

மேலும் படிக்க - "கஜா புயலை எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது: முதல்வர் நாராயணசாமி"

மேலும் கஜா புயலால் தமிழகம் மற்றும் புதுவையைத் தொடர்ந்து, அந்திர மாநிலத்துக்கும் பலத்த மழையும் காற்றும்இன்னும் சில தினங்களுக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement