This Article is From Dec 02, 2018

''கஜா புயலால் பாதிப்பில்லை எனக்கூறும் அரசியல்வாதிகள்தான் நாட்டின் பேரிடர்" - கொதிக்கும் கமல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு கமல்ஹாசன் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

''கஜா புயலால் பாதிப்பில்லை எனக்கூறும் அரசியல்வாதிகள்தான் நாட்டின் பேரிடர்

கஜா புயலால் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று ஊடகங்களில் பேட்டியளிக்கும் அரசியல்வாதிகள்தான் நாட்டின் பேரிடர் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. நிவாரண பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், புயல் பாதிப்புகளை மத்திய குழு ஒன்று மதிப்பிட்டுச் சென்றுள்ளது.

நிவாரண பணிகளை பல்வேறு தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கஜா புயல் நிவாரண நிதிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

 

 

கமல்ஹாசனின் கோரிக்கையை ஏற்று கேரள அரசு ரூ. 10 கோடியை நிவாரண நிதியாக அனுப்பி வைத்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களில் முகாமிட்டுள்ள கமல்ஹாசன் மக்களை சந்தித்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இன்று அவர் ட்விட்டர் பக்கத்தில் கஜா புயல் குறித்து காட்டமான பதிலை வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில், ''கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்.'' என்று கூறியுள்ளார்.

.