This Article is From Nov 15, 2018

கஜா புயல் எதிரொலி: அண்ணாமலை, பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து!

கஜா புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
தெற்கு Posted by

கஜா புயல் இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கடலூர் மற்றும் பாம்பனுக்கு இடையில் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி கஜா புயல் நாகையிலிருந்து 150 கி.மீ தூரத்தில் உள்ளது. மணிக்கு 21 கி.மீ.வேகத்தில் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும் போது கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 20செ.மீ.க்கு மேல் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை காரணமாக தமிழகத்தில் கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, திரூவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், புதுச்சேரி மற்றும காரைக்காலில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கஜா புயல் காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார்.

Advertisement

இதேபோல், கஜா புயல் காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெறுவதாக இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement