டெல்லி ராஜ்கட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி
New Delhi: தேசப் பிதா மகாத்மாக காந்தியின் 149வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு நெகிழ்ச்சியுடன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது குறித்து அவர், ‘இந்தியா, பன்மைத்துவத்தின் நிலம். ஒரு மனிதன் இந்த பன்மைத்துவ சமூகத்தை ஒன்றிணைத்தார் என்றால், அவர்களிடம் இருக்கும் வேற்றுமைகளை கடந்து உயர்த்தினார் என்றால், காலனியாதிக்கத்துக்கு எதிராக போராடினார் என்றால், அது மகாத்மா காந்தி தான்’ என்று நெகிழ்ச்சியுடன் தனது ப்ளாக்கில் எழுதியுள்ளார்.
அவர் மேலும், ‘சமத்துவத்துடனும், மரியாதையுடனும் வாழ நினைக்கு பலருக்கு அவர் தான் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகிறார். தீவிரவாத்தாலும், அடிப்படை வாதத்தாலும், தேசங்கள் பிரிந்து நிற்கும் இந்த சமயத்தில், அவரின் அகிம்சை கொள்கை தான் மக்களை இணைக்கும் சக்தியாக உள்ளது.
21 ஆம் நூற்றாண்டிலும் மகாத்மா காந்தியின் எண்ணங்களும், எழுத்துகளும் பல விஷயங்களுக்கு தீர்வு காண பயன்படுகிறது. சமத்துவமின்மை என்பது மிகச் சாதரணமாக இருக்கும் இக்காலத்தில், காந்தியின் கொள்கை தான் சமத்துவத்துக்கு ஒலிப் பாய்ச்சுகிறது.
நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் சுதந்திரத்துக்காக போராடினார்கள் என்று அவர் உணரவைத்தார். காந்தியின் எண்ணங்களுக்கு உயிர் கொடுக்க நாம் அனைவரும் பாடுபடுவோம். உணவை பாழாக்கமல் இருத்தலில் இருந்து அதை ஆரம்பிக்கலாம். வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பதிலிருந்து தொடங்கலாம். ஒன்றாக வாழ்வதன் மூலம் முயற்சி செய்யலாம்’ என்று எழுதியுள்ளார்.
அவரது பதிவின் முடிவில் காந்தியின் மேற்கோள் ஒன்றை எழுதியுள்ளார் மோடி, ‘ ‘ஒரு நல்ல மனிதன் என்பவன், பிறரின் வலியை உணர்பவன் ஆவான்’. அந்த எண்ணம் தான் அவரை, மற்றவர்களுக்காக வாழ வைத்தது. இந்த நாட்டுக்காக போராடி அவர் உயிர் விட்டார். அவரின் கனவுகளை உயிர்பிக்க, நாம் 130 கோடி பேரும் அயராது பாடுபடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.