Read in English
This Article is From Sep 14, 2018

வாட்ஸ் ஆப் மற்றும் ஃபேஸ்புக்கில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!

Ganesh Chaturthi: நகரத் தெருக்களில் பெரிய சைஸ் விநாயகர் சிலைகள் இருந்தால், வீட்டுக்குள்ளே சின்ன சைஸ் விநாயகர் அலங்காரத்துடன் (குடையுடன் பாஸ்) அழகாக வீற்றிருப்பார்

Advertisement
இந்தியா

Ganesh Chaturthi: இந்த விநாயகர் சதுர்த்தியில், உங்கள் வீட்டிலும் வாழ்விலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்

New Delhi:

மனிதன், விலங்குகள், இயற்கை வளங்கள் என ஒரு உயிரினம் இவ்வுலகில் அவதரித்த நாளையே, அதன் பிறந்தநாளாகக் கருதுகிறோம். அப்படி இன்று இவ்வுலகில் (செப்டம்பர் 13, 2018) பிறந்தநாள் கொண்டாடப்போவது யார் தெரியுமா? நம்ம விநாயகர்தான்! கணேஷ் சதுர்த்தி அல்லது விநாயகச் சதுர்த்தி என அழைக்கப்படும் இப்பண்டிகை, 10 நாள்களுக்கு நடைப்பெறுவது வாடிக்கை. இறுதிநாளில் விநாயகர் சிலையை கடலில் மூழ்கச்செய்வதுடன் பண்டிகை நிறைவுபெறும். அதுவரை ஊரெங்கும் ஒரே கொண்டாட்டம்தான்!

நகரத் தெருக்களில் பெரிய சைஸ் விநாயகர் சிலைகள் இருந்தால், வீட்டுக்குள்ளே சின்ன சைஸ் விநாயகர் அலங்காரத்துடன் (குடையுடன் பாஸ்) அழகாக வீற்றிருப்பார். தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்படும். உங்களுக்கும் உங்களுக்குப் பிடித்தமானவருக்கும் எல்லா வளமும் அதிர்ஷ்டமும் கிடைத்து, செழிப்பாக வாழ்வை வாழ்வோம் என எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் பிராதிப்போம்!
கணபதி பாபா மோரியா

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

தீய சக்திகளிடமிருந்து நம்மைக் காத்து, விநாயகர் நம் வாழ்விற்கு வழிகாட்டியாக இருந்து வளப்படுத்துவார்

உங்களின் எல்லா கனவுகளையும் நிறைவுபெறச் செய்து, எல்லா அதிர்ஷ்டத்தையும் எல்லாம் வல்ல விநாயகர் வழங்குவார். விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

இந்த விநாயகர் சதுர்த்தி, உங்கள் வாழ்விற்குத் தேவையான வளங்களையும் நம்பிக்கையையும் வழங்குவதற்கான ஆரம்பமாக இருக்கட்டும்.

இந்த விநாயகர் சதுர்த்தி, கொழுக்கட்டை போல இனிப்பாக இருக்கட்டும்

இந்த விநாயகர் சதுர்த்தியில், உங்கள் வீட்டிலும் வாழ்விலும் மகிழ்ச்சியும் வளமும் பெருகும்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் புதிய தொடக்கத்தை அளித்திட, காப்பாளனான விநாயகரை வரவேற்றுக் கொண்டாடுவோம்!

பூமியை மழை ஆசிர்வதிப்பதுபோல, நமது மகிழ்ச்சிக்கு விநாயகர் ஆசிர்வதிப்பார். கணபதி பாபா மோரியா

கணபதி பாபா மொரியா… மங்கள் மூர்த்தி மோரியா…

விநாயகரை வரவேற்று, அவரின் ஆசியுடன் புதிய வாழ்வைத் தொடங்குவோம்!

இந்த விநாயகர் சதுர்த்தியில், அன்பைத் தழுவி அதை அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்! கணபதி பாபா மோரியா…
     

 

 

 

 

 

 

 
 
 

 

 

 

Advertisement