Read in English
This Article is From Sep 02, 2019

விநாயக சதுர்த்தி : சுற்றுச் சூழலுக்கு தீங்கு விளைவிக்காத விநாயகர் சிலைகள்

Ganesh Chaturthi: சுற்றுச்சுழலுக்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படாத வகையில் கலைஞர்கள் பயிறு, மூங்கில் மற்றும் கழிவு காகிதங்கள் நீரில் கரையக்கூடிய வண்ணங்களையே பரிசோதித்து விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர்.

Advertisement
இந்தியா Edited by (with inputs from ANI)

செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியாவெங்கும் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது.

New Delhi:

விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் தொடங்கி விட்டன. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நேரத்தில் அனைவரும் நினைவில் வைத்துக் கொள்வது என்னவென்றால் விநாயகர் சிலைகள் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையில் செய்வது மிகவும் அவசியமாகிறது. 

 சுற்றுச்சுழலுக்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படாத வகையில் கலைஞர்கள் பயிறு, மூங்கில் மற்றும் கழிவு காகிதங்கள் நீரில் கரையக்கூடிய வண்ணங்களையே பரிசோதித்து விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர்.

மும்பையில் 22 அடி கணபதி சிலை மூங்கில் குச்சிகள்,காகிதக் கூழ், தண்ணீரில் கரையக்கூடிய வண்ணத்தை பயன்படுத்தி செய்துள்ளனர். 

Advertisement

22 அடி உயர விநாயகர் சிலையை உருவாக்க 15 பணியாளர்கள் 6 மாதமாக பணிபுரிந்துள்ளனர். சிலையின்  எடை 1500-2000 கிலோ எடையாகும். இந்த விநாயகர் சிலை முழுக்க சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தண்ணீரில் கரையக்கூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் போட்டால் 45 நிமிடங்களில் கரைந்து விடும் என்று உருவாக்கிய கலைஞர் தெரிவித்துள்ளார்.

“அலங்காரத்திற்கு எந்த ஃப்ளெக்ஸ் போர்டையும் பயன்படுத்தவில்லை என்றும் பெரிய துணியால் மூடியே செய்து முடித்துள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

உத்திர பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற விநாயக சிலைக்கு தேவை அதிகரித்துள்ளது. “நாங்கள் செய்யும் விநாயக சிலைகள் நதியினை அசுத்தப்படுத்தாது” என்று தெரிவித்துள்ளனர்.

மொரதாபாத்தில் உள்ள கடையில் வெவ்வேறு அளவுகளில் கணேஷ் சிலைகள் செய்து வரிசைப்படுத்தியுள்ளன. விநாயகர் சதுர்த்திக்கான ஏற்பாடுகள் குஜராத் வதோதராவில் தொடங்கியுள்ளன. சிலையை செய்ய களிமண்ணையே பயன்படுத்துகின்றனர். செப்டம்பர் 2 ஆம் தேதி இந்தியாவெங்கும் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படவுள்ளது. 
 

Advertisement