Read in English
This Article is From Jan 21, 2019

''அடுத்த ஆண்டுக்குள் கங்கை 100 சதவீதம் தூய்மையாகி விடும்''- மத்திய அமைச்சர் உறுதி

மாவட்டம் மற்றும் மாநிலம் வாரியாக கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா

கங்கையை தூய்மைப்படுத்தும் கனவு நனவாகும் என்று கூறியுள்ளார் நிதின் கட்காரி

Nagpur:

அடுத்த ஆண்டுக்குள் கங்கை ஆறு 100 சதவீதம் தூய்மைப்படுத்தப்பட்டு விடும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். 

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நிதின் கட்காரி பேசியதாவது- 

கங்கையை தூய்மைப்படுத்த ரூ. 26 ஆயிரம் கோடி செலவில் திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 10 சதவீத திட்டம் மட்டுமே நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் மார்ச் மாதத்திற்குள்ளாக 30 முதல் 40 சதவீத திட்டங்கள் நிறைவு பெறும்.

அந்த வகையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 100 சதவீத திட்டங்கள் நிறைவேற்றி முடிக்கப்பட்டு கங்கை ஆறு முழுவதுமாக தூய்மைப்படுத்தப்படும். கங்கை மட்டுமல்ல, சுமார் 40 கிளை ஆறுகளையும் தூய்மைப்படுத்தும் நடவடிக்கை செயல்படுத்தப்பட்டுள்ளது. 

யமுனை ஆற்றை தூய்மைப்படுத்த ரூ. 800 கோடி செலவில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. கங்கையை சுகாதாரமாக்கும் நமது கனவு நனவாகும் என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

நமமி கங்கா என்ற பெயரில் கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம் கடந்த 2015 மே 13-ம்தேதி தொடங்கியது. இதன்படி கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் உள்ள அசுத்தங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. 

Advertisement