Read in English
This Article is From Nov 19, 2019

நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்தி விட்டால் காற்று மாசு குறைந்து விடுமா…? கவுதம் கம்பீர்

“நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் காற்று மாசுபாடு குறைந்து விடுமா…? நான் சாப்பிட்டதால்தான் காற்று மாசு அதிகரித்திருந்தால் ஜிலேபி சாப்பிடுவதையே நிறுத்தி விடுகிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by

காற்று மாசுபாடு தொடர்பாக ஒரு முக்கியமான கூட்டத்தை தவிர்த்துள்ளார்.

New Delhi:

பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் கவுதம் காம்பீர் இரண்டு நாட்களுக்கு முன்னர் காற்று மாசுபாடு தொடர்பாக ஒரு முக்கியமான கூட்டத்தை தவிர்த்துள்ளார். இதன் காரணமாக விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார் 

ஞாயிற்றுக் கிழமை டெல்லி முழுவதும் கவதம் காம்பீரை காணவில்லை என்று சுவரொட்டிகள் டெல்லி முழுவதும் ஓட்டப்பட்டன.  “காணவில்லை. இந்த நபரை நீங்கள் பார்த்தீர்களா? அவர் கடைசியாக இந்தூரில் ஜிலேபி சாப்பிடும் போது காண முடிந்தது. ஒட்டுமொத்த டெல்லியும் அவரைத் தேடுகிறது”என்று சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்நிலையில் இந்த விமர்சனத்திற்கு தன் எதிர்வினையை தெரிவித்துள்ளார் கவுதம் காம்பீர். “நான் ஜிலேபி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் காற்று மாசுபாடு குறைந்து விடுமா…? நான் சாப்பிட்டதால்தான் காற்று மாசு அதிகரித்திருந்தால் ஜிலேபி சாப்பிடுவதையே நிறுத்தி விடுகிறேன்” என்று கூறியுள்ளார். 

Advertisement

என்னை ட்ரோல் செய்வதில் காட்டிய முயற்சியை மாசுபாட்டை குறைக்க முயற்சித்திருந்தால் நாங்கள் நன்றாக சுவாசிக்க முடிந்திரும்ம் என்று தெரிவித்தார்.

Advertisement