This Article is From Dec 08, 2018

ஓய்வுக்கு முன் கடைசி போட்டியில் சதமடித்து அசத்திய கம்பீர்!

கவுதம் கம்பீர் தனது சொந்த ஊரில் சதத்துடன் தனது கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்வது அவரது ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளது

Advertisement
Sports Posted by

இந்திய அணியின் துவக்க வீரர் கம்பீர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இறுதியாக ஆந்திரா அணியுடனான ரஞ்சி போட்டியில் ஆடவிருப்பதாக அறிவித்திருந்தார். க்ரூப் பி பிரிவில் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது.

முதலில் பேட் செய்த ஆந்திரா அணி 390 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட்டுகளை 190 ரன்கள் என்ற நிலையில் இருந்தது. கம்பீர் ஆட்டமிழக்காமல் 92 ரன்களுடன் களத்தில் இருந்தார். மூன்றாம் நாள் ஆட்டம் இன்று துவங்கிய சிறிது நேரத்தில் கம்பீர் சதமடித்தார். முதல்தர கிரிக்கெட்டில் இது வரது 43வது சதமாகும்.

தனது கடைசி போட்டியை சதத்தோடு முடித்துள்ளார் கம்பீர். டெல்லி துவக்க வீரர் ஹிட்டன் டலாலுடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 108 ரன்களையும் சேர்த்தார்.

Advertisement

டெல்லி வீரரான கவுதம் கம்பீர் தனது சொந்த ஊரில் சதத்துடன் தனது கிரிக்கெட் வாழ்வை நிறைவு செய்வது அவரது ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளது. கம்பீர் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக இருந்தவர் என்பது நினைவு கூறத்தக்கது.

மேலும் படிக்க -"அந்த கடைசி ஓவர்... ஒரு சிக்ஸர்" - மறைக்கப்பட்ட கம்பீர் எனும் 'சைலண்ட் சாம்பியன்'

Advertisement
Advertisement