This Article is From Aug 06, 2019

“சரியா சொன்னீங்க போங்க…”- அப்ரீடியின் காஷ்மீர் ட்வீட்டும் கம்பீரின் கேலியும்!

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என்று பகிரங்கமாக அறிவித்தார்.

“சரியா சொன்னீங்க போங்க…”- அப்ரீடியின் காஷ்மீர் ட்வீட்டும் கம்பீரின் கேலியும்!

நேற்று மாநிலங்களவையில் ஜம்மூ காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

New Delhi:

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவு 370-ஐ ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது மத்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரீடி, ஐ.நா சபை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அப்ரீடியின் இந்த கருத்துக்கு கேலி செய்யும் விதத்தில் ரிப்ளை கொடுத்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் இன்னாள் பாஜக எம்.பி-யுமான கவுதம் கம்பீர். 

நேற்று மாநிலங்களவையில் ஜம்மூ காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் அம்மாநிலத்துக்கு 370 மற்றும் 35ஏ சட்டப் பிரிவுகள் மூலம் அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும். 

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து அப்ரீடி, தனது ட்விட்டர் பக்கத்தில், “ஐ.நா சபை தீர்மானத்தின்படி காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் உரிமை வழங்கப்பட வேண்டும். நம் எல்லோருக்கும் இருக்கும் சுதந்திரம் போல அவர்களுக்கும் இருக்க வேண்டும் அல்லவா. எதற்கு ஐ.நா சபை உருவாக்கப்பட்டது. எதற்கு அது இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது. காஷ்மீரில் மனித சமூகத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்டு வரும் வன்முறை கவனிக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த விஷயத்தில் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என்று கூறினார். 
 

இதற்கு கவுதம் கம்பீர், “அப்ரீடி, சரியாக சொன்னீர்கள். வன்முறை இருக்கிறது, மனித சமூகத்துக்கு எதிராக குற்றங்கள் நிகழ்த்தப்பட்டது உண்மை. இப்படி பேசியதற்கு அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தேயாக வேண்டும். ஆனால், ஒரு விஷயத்தை மட்டும் அவர் மறந்துவிட்டார். இவை அனைத்தும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. கவலைப்பட வேண்டும். அதுவும் சீக்கிரம் சரி செய்யப்படும்” என்று கேலி செய்யும் விதத்தில் பதிலடி கொடுத்துள்ளார். 

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரின் இந்த கருத்தை இந்தியா ஏற்கவில்லை. ‘காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை பாகிஸ்தானுடன் மட்டும்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம். அது இருவர் பங்கேற்கும் பேச்சுவார்த்தையாக மட்டும்தான் இருக்கும்' என்று இந்தியா கறாராக தெரிவித்துவிட்டது. 

.