This Article is From Nov 27, 2019

“பிரபாகரன் ஐயப்ப பக்தர், சபரிமலைக்குச் சென்றுள்ளார்…”- கொளுத்திப்போடும் காயத்ரி ரகுராம்!

“தலைவர் பிரபாகரன் ஐயா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் ஐயப்ப மற்றும் முருக பக்தர்"- Gayathri Raghuramm

Advertisement
தமிழ்நாடு Written by

"வரலாற்றைப் படியுங்கள். உங்கள் தலைவர் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள்"

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரனின் (Prabakaran) 65வது பிறந்தநாள் நேற்று. அதையொட்டி பல தமிழ் அமைப்புகள், மாநில அளவில் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தின. தற்போது பிரபாகரன் குறித்து ‘பிக் பாஸ்' புகழ் நடிகையும், பாஜக உறுப்பினருமான காயத்ரி ரகுராம் (Gayathri Raghuramm), சர்ச்சைக்குரிய வகையில் ஒரு புதிய பதிவை இட்டுள்ளார்.

“தலைவர் பிரபாகரன் ஐயா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் ஐயப்ப மற்றும் முருக பக்தர். அவர் தலைவராக உருவெடுப்பதற்கு முன்னர் மகாலிங்கபுரத்தில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கும் சபரிமலைக்கும் சென்றுள்ளார். சில உண்மைகளை சிலர், அவர்களுக்கு ஏற்றவாறு வசதியாக மறைத்துவிட்டனர். வரலாற்றைப் படியுங்கள். உங்கள் தலைவர் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள்,” என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காயத்ரி ரகுராம். 

முன்னர் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (VCK) தலைவர் தொல்.திருமாவளவன் (Thol.Thirumavalavan), இந்து கடவுள்கள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை முன்வைத்து பிக் பாஸ் (Bigg Boss) புகழ் நடிகை, காயத்ரி ரகுராம், திருமாவளவனை கறாரான வகையில் விமர்சித்தார். திருமாவளவனை விமர்சித்து அவர் இட்ட சில ட்விட்டர் பதிவுகள், அவதூறு கிளப்பும் வகையில் இருந்தன. இதன் காரணத்தால் அவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. 

அந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்னர், தற்போது புயலைக் கிளப்பும் இன்னொரு கருத்தைத் தெரிவித்துள்ளார். 
 

Advertisement
Advertisement