இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளராக சந்திர முர்மு நியமனம்! (File)
New Delhi: ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த சந்திர முர்மு, நாட்டின் தலைமை கணக்கு தணிக்கையாளராக நேற்றிரவு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சந்திர முர்மு நேற்று முன்தினம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
நாட்டின் தலைமை கணக்கு தணிக்கையாளராக பதவி வகித்து வந்த ராஜீவ் மெஹ்ரிஷிக்கு 65 வயதாகி விட்டதால், அவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. தலைமை கணக்கு தணிக்கையாளர் ஒரு அரசியலமைப்பு பதவியாகும் அதனை காலியாக விட முடியாது.
ஆக.8ம் தேதியுடன் ராஜீவ் மெஹ்ரிஷி 65 வயதை எட்டுகிறார். அதனால், தான் அவருக்கு மாற்றாக ஒருவரை ஏற்பாடு செய்வதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக அமைச்சரவை செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் என்டிடிவிக்கு தெரிவித்திருந்தார்.
2ஜி தொலைதொடர்பு ஸ்பெக்ட்ரம் ஊழலைத் தூண்டிய ஒரு அறிக்கையை முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளராக பதவி வகித்த வினோத் ராய் வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டே, காங்கிரஸின் 2014 தோல்விக்கு மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்றாக பரவலாகக் காணப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர், அந்த அறிக்கை நீதிமன்றத்தில் நிரூபிக்க தவறிவிட்டது.
முர்முவின் ராஜினாமா பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவர் ராஜினாவை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தேர்தல் நடத்தப்படலாம் என்றும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ஜம்மு-காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இரண்டு ஆண்டுகளில் கவிழ்ந்த நிலையில், அதன் பின்னர் அங்கு தேர்தல் நடத்தப்படாதது, குறித்து கருத்து கணிப்புகள் கவலை தெரிவித்தன.
இந்த அறிக்கைகளுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், தேர்தல் நேரம் குறித்த முடிவுகளை தேர்தல் ஆணையம் மட்டுமே எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.
கிரிஷ் சந்திரா மர்மு 1985ஆம் ஆண்டில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வானார். இவர், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் மோடியின் முதன்மை செயலாளராகவும் இருந்தார். தொடர்ந்து, மோடி பிரதமர் ஆனதும் முர்மு உள்துறை நிதிஅமைச்சகத்தில் பணியாற்றி வந்தார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பரிவு 370-ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் முதல் துணைநிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா மர்மு நியமனம் செய்யப்பட்டார்.