This Article is From Jun 11, 2019

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரின் வளர்ச்சி குறித்த விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம்!

பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளி விவரங்களை குறிப்பிட்ட முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் நாட்டின் வளர்ச்சி மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரின் வளர்ச்சி குறித்த விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம்!

பொருளாதார புள்ளி விவரங்களில் துல்லியத்தன்மை இல்லை என்று அரவிந்த் சுப்ரமணியன் கூறியுள்ளார்.

NEW DELHI:

ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளின்  அடிப்படையில்தான் நாட்டின் வளர்ச்சி குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த விளக்கத்தை புள்ளியியல் மட்டும், திட்ட நடைமுறைப்படுத்துதல் அமைச்சகம் கூறியுள்ளது. 

முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார வளர்ச்சியை விமர்சித்த நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. முந்தைய மோடி அரசு ஆட்சியில் இருந்தபோது 2014 முதல் 2018 வரை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக அரவிந்த் சுப்ரமணியன் இருந்தார். 

ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தித்தாளில், அவர் எழுதியிருக்கும் கட்டுரையில் நாட்டின் வளர்ச்சி உண்மையிலேயே 4.5 சதவீதம் என்றும் ஆனால் 7 சதவீதம் என மிகைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

பொருளாதாரம் குறித்த துல்லியமற்ற புள்ளி விவரங்கள் பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ள சுப்ரமணியன் வங்கித்துறை மற்றும் விவசாய துறை சீர் திருத்தங்கள் சவாலானதாக இருக்கும் என்று கூறியுள்ளார். 
 

.