This Article is From May 31, 2019

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக சரிவு! 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி!!

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையின்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2019-20-ல் 7.2 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக சரிவு! 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி!!

அதிகவேகமாக வளர்ச்சியடையும் நாடு என்ற பெயரை சீனாவிடம் இந்தியா இழந்திருக்கிறது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் ஜனவரி - மார்ச் காலாண்டில் 5.8 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன. கடந்த ஆண்டில் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டில் அது 5.8 சதவீதமாக குறைந்துள்ளது. 

நடப்பாண்டில் 7.2 சதவீத பொருளாதா வளர்ச்சி எட்டப்படும் என முன்பு ரிசர்வ் வங்கி தெரிவித்த நிலையில், தற்போது 6.8 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோன்று மத்திய புள்ளியியல் அலுவலகமும் இதே அளவுக்குத்தான் வளர்ச்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதே முதல் காலாண்டில் சீனாவின் வளர்ச்சி 6.4 சதவீதமாக உள்ளது. இதன் மூலம் அதிகவேகமாக வளர்ச்சியடையும் நாடு என்ற பெயரை சீனாவிடம் இந்தியா இழந்திருக்கிறது. 

.