முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏகே அந்தோனியின் மகன் அனில் அந்தோனி
Thiruvananthapuram: முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏகே அந்தோனியின் மகன் அனில் அந்தோனி காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் வயநாடு ட்விட்டர் கணக்கினை மேற்பார்வை செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வமாக ஆர்.ஜி வயநாடு என்ற ட்விட்டர் கணக்கினை தொடங்கியுள்ளார்.அவருடைய அலுவலகம் மே 23 வரை நிர்வாக பணிகளுக்காக தரப்பட்டுள்ளது என்று அனில் அந்தோனி தெரிவித்துள்ளார். இவர் ஒரு ஐடி தொழிமுறை நிபுணர் ஆவார்.
கேரள ஊடகங்களுக்கு நிகழ்ச்சிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை இந்த ட்விட்டர் பக்கம் அறிவிக்கும். ராகுல் காந்தியின் ட்விட்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படும். அறிக்கைகளும் தகவல்களும் இனி மலையாள மொழிபெயர்ப்பிலேயே கிடைக்கும்.
ராகுல்காந்தி வயநாட்டிலும் உத்திர பிரதேசமான அமேதியிலும் போட்டியிடுகிறார்.