Elections 2019: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்களே வித்யாசகர் சிலையை சேதப்படுத்தியதாக மோடி கூறியுள்ளார்.
New Delhi: கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
முன்னதாக கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியின்போது 'கோபேக் அமித்ஷா' என கல்லூரி மாணவர்கள் சிலர் பதாகை எந்தி நின்றதை தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் மாணவர்களை கடுமையாக தாக்கினர். இதைத்தொடர்ந்து, அங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையில் பெரும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் வித்யாசாகர் கல்லூரி வளாகத்தில் இருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்பட்டது. இந்த சிலை உடைப்புக்கு அவர்களே காரணம் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மாறி மாறி குற்றம்சாட்டி வந்தன.
இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் மாவ் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களின் தொந்தரவுகளை நாங்கள் மீண்டும் சந்தித்தோம், கொல்கத்தாவில் நடந்த அமித்ஷா பேரணியில் கலவரத்தை ஏற்படுத்தி அவர்கள் வித்யாசாகர் சிலையை சேதப்படுத்தினர். இவர்களை போன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்ககப்பட வேண்டும்.
வித்யாசகரை பின்பற்றுபவர்கள் நாங்கள்.. அதனால், கொல்கத்தாவில் சேதப்படுத்தப்பட்ட வித்யாசாகர் சிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்று அவர் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரெடிக்-ஒ-'பிரெயின் தனது டிவிட்டர் பதிவில், மோடி ஒரு பொய்யர் என குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த அமித்ஷா பேரணி செல்லும் வழியில் இருந்த வித்யாசகர் கல்லூரி அருகில் ஏற்பட்ட மோதலை தொடரந்து, அங்கிருந்த ஈஸ்வர் சந்திரா வித்யாசாகர் சிலை சேதப்படுத்தப்பட்டது.
'கோபேக் அமித்ஷா' என கல்லூரி மாணவர்கள் சிலர் பதாகை எந்தி நின்றதே முதலில் வன்முறை ஏற்பட காரணமாக இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, காவி உடை அணிந்த பாஜக ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட துவங்குகின்றனர். இதுதொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளில், கல்லூரி வாயில் கதவுகளை உடைத்து உள்ளே செல்கின்றனர்.
இதுகுறித்து அமித்ஷா கூறும்போது, மம்தா பானர்ஜியின் கட்சி ஆட்களே வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு பாஜகவினரை குற்றம்சாட்டுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.