நரேந்திர மோடி ரஃபேல் ஒப்பந்தத்தை கையகப்படுத்தினாரா இல்லையா என்பதை கேட்க விரும்புகிறேன்.
Bilaspur, Himachal Pradesh:
பிரதமர் நரேந்திர மோடி 2014 ஆம் ஆண்டு தன்னை கங்கையின் மகன் என்று கூறியிருந்தார். ஆனால் தேர்தலுக்குப் பின் “ரஃபேலின் ஏஜெண்ட் என அறிவார்கள் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்தார்.
“நரேந்திர மோடி ரஃபேல் ஒப்பந்தத்தை கையகப்படுத்தினாரா இல்லையா என்பதை கேட்க விரும்புகிறேன். ரஃபேல் குறித்து விவாதத்தை இந்தியாவில் எங்கு வேண்டுமென்றாலும் நடத்த தயார். ராகுல் காந்தி ஒரு பீரங்கி என்றால் நான் ஏகே-47” என்று தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
நான் ஊழலை செய்யவோ அல்லது அனுமதிக்கவோ மாட்டேன். ரஃபேல் குறித்த விவாதத்தில் தோல்வியடைந்தால் நான் அரசியலை விட்டு விலகுவேன். 2014ன் கங்கையின் மகன் 2019ல் ரஃபேல் ஏஜெண்ட்டானார் என்று கூறினார்.
இமாச்சல பிரதேசத்தில் மே4 அன்று தேர்தல் நடைபெற்றது. மே 19ல் சில இடங்களில் தேர்தல் நடைபெறும், மே23 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.