Lok Sabha Polls: 2014 பொது தேர்தலில் 66.40 சதவீத மதிப்பீட்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
New Delhi: 2019 ஆம் ஆண்டுக்கான லோக் சபா தேர்தல் ஆறு வாரங்களுக்கு மேலாக 7 கட்டமாக நடந்து முடிந்தது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களின் வரலாற்றில் மிக அதிகமான வாக்காளர் எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. 67.11 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.
2014 பொது தேர்தலில் 66.40 சதவீத மதிப்பீட்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு 58.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் 2014 தேர்தலில் 55,41,255 குடிமக்கள் வாக்களித்தனர். இதில் 46.95 சதவீதம் (26,0192,272) பெண்கள் வாக்களித்தனர். நோடா பொதுத் தேர்தலில் முதன் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
543 தொகுதிகளில் 542 தொகுதிகளில் வாக்குபதிவு நடந்து முடிந்துள்ளது. தமிழ்நாட்டில் வேலூரில் பணப் பட்டுவாடா காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்படுள்ளது. அதற்கான தேர்தல் குறித்து எந்தவொரு அறிவிப்பும் செய்யப்படவில்லை.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது. 12 முதல் 14 வாக்கு சாவடி கருத்துக் கணிப்பு படி பாஜக பெரும்பான்மை வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 265 முதஹ்ல் 365 வரையான தொகுதிகளில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜம்மு மற்றூம் காஷ்மீர் மாநிலத்தில் லடாக் மற்றுக் அன்ந்தநாக் ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை அதிகரித்தது. 69.61 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 72.25 சதவீத வாக்குப் பதிவானது. இது 2014 ஆம் தேர்தல்களை விட 7.8 சதவீதம் அதிகரித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை 71.1 சதவீதமாக இது உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் மாநிலத்தில் 64.11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.