General elections 2019: தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஒன்பது கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக போட்டியிடுகிறது.
New Delhi: தமிழகத்தின் இரண்டு மாபெரும் தலைவர்களான ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி இல்லாத நிலையில் வருகிற முதல் தேர்தல் என்பதால் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா இல்லாத வெற்றிடத்தை நிரப்ப அஇஅதிமுக பெரும்பாடுபட்டு வருகிறது. இந்த தேர்தல் கவனத்திற்குரிய வகையில் 39 பாராளுமன்ற உறுப்பினர்களை அனுப்பும் மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் இந்த வெற்றிடத்தை நிரப்ப கட்சி தொடங்குவோம் என்று அறிவித்திருந்த நிலையில் கமல்ஹாசன் மட்டுமே மக்கள் நீதி மய்யக் கட்சியைத் தொடங்கி 40 தொகுதியிலும் இந்தக் கட்சி போட்டியிடவுள்ளது.
1. திமுக கட்சியின் தலைவராக இருந்த மு.கருணாநிதி மற்றும் அஇஅதிமுக கட்சியின் தலைவர் ஜெ. ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாத நிலையில் நடைபெறும் முதல் தேர்தல்.
2. இந்த தேர்தல் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கலைஞர் கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலினுக்கும் அஇஅதிமுக கட்சியின் பிரதிநிதிகளான எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வத்திற்கும் இடையே முக்கியப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
3. தமிழகத்தில் பல கட்சிகள் போட்டியிடும் நிலையில் தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிமுக- பாஜக கூட்டணி மற்றும் திமுக-காங்கிரஸ் கட்சி மட்டுமே பிரதானமாக பார்க்கப்படுகிறது.
4. இந்த முறை ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் சொந்தமான டிடிவி. தினகரன் அமமு கட்சியை தொடங்கியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யக் கட்சியை தொடங்கியுள்ளார்.
5. இந்த நாடாளுமன்றத் தேர்தல் 39 தொகுதிகளில் நடைபெறுகிறது. 18 தொகுதிகளில் இடைத் தேர்தலும் இணைந்து நடக்கிறது. மேலும் 4 தொகுதிகளில் மே 29 நடைபெறுகிறது. அஇஅதிமுக குறைந்தது 5 தொகுதிகளில் வெற்றி பெற்றால் தான் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.
6. 2014 ஆம் ஆண்டில் பாஜகவுடன் இணக்கமாக இருந்தாலும் இனிமே எந்தக் கட்சியுடனும் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிடும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் இம்முறை பாஜகவிற்கு 5 இடங்களும் பாமகவிற்கு 6 இடங்களும் தேமுதிகவிற்கு 4 இடங்களும் ஒதுக்கியுள்ளது அஇஅதிமுக
7. தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஒன்பது கட்சிகளுடன் இணைந்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக போட்டியிடுகிறது.
8. இதில் காங்கிரஸ் இணைந்துள்ளது காங்கிரஸ் 10 தொகுதியிலும் திமுக 20 இடங்களும் போட்டியிடுகிறது.
9. அ இஅதிமுக மற்றும் திமுக நேருக்கு நேராக 20 தொகுதிகளில் போட்டியினை எதிர்கொள்கிறது. டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு பரிசு பெட்டகம் என்ற சின்னத்தை பெற்று போட்டியிடுகிறது. மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட் சின்னத்தில் 39 தொகுதிகளிலும் போட்டியினை எதிர்கொள்கிறது.
10. இரண்டு தேசிய கட்சிகளும் தங்களது கூட்டணியை நிலைநிறுத்த சில சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.