বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 31, 2019

இந்திய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் பொறுப்பேற்பு!

கடந்த 37 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருக்கும் நராவனே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்சியை கட்டுப்படுத்துவது, அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். மனோஜ் முகுந்த் நராவனேவிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார் பிபின் ராவத். 

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது, 'ராணுவத்தின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில், ராணுவம், கடற்படை, விமானப் படை என, முப்படைகளின் தலைமை தளபதி நியமிக்கப்படுவார்' என, அறிவித்தார். 

இதன்படி, ராணுவம், கடற்படை, விமானப் படை தளபதிகளைப் போல், தலைமை தளபதியும், நான்கு நட்சத்திர அந்தஸ்து உடைய ராணுவ அதிகாரியாக இருப்பார் என்று மத்திய அரசு அறிவித்தது. ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்று, இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படை தளபதியாக புதிய பொறுப்பை ஏற்க உள்ளார் பிபின் ராவத், அதன் காரணமாக புதிய ராணுவ தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். 

புதிய ராணுவ தளபதியான நரவனே, தற்போது கிழக்கு பிராந்திய தளபதியாக இருக்கிறார். மகாராஷ்டிராவின் புனேவின் பள்ளி படிப்படை முடித்தார் நரவனே. புனே தேசிய பாதுகாப்பு அகாடமி, டேராடூன் இந்திய ராணுவ அகாடமியிலும் சென்னை பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு தொடர்பாக முதுகலை பட்டமும் படித்தவர்.

Advertisement

1980-ம் ஆண்டு 7-வது சீக்கியர் படைப்பிரிவில் இணைந்தார்.வடகிழக்கு மாற்றும் காஷ்மீரில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், 2017-ம் ஆண்டு குடியரசு தின ராணுவ அணிவகுப்பின் தளபதியாகவும் பணியாற்றியவர் நரவனே. கடந்த செப்டம்பர் 1-ந் தேதி ராணுவ துணை தளபதியாக நியமிக்கப்பட்டார்.

நராவனே, சீனாவுடனான எல்லையை பாதுகாக்கும் இந்திய ராணுவத்தின் கிழக்கு படைப் பிரிவுக்கு தலைமை வகித்து வந்தார்.

Advertisement

கடந்த 37 ஆண்டுகளாக ராணுவ பணியில் இருக்கும் நராவனே, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கிளர்சியை கட்டுப்படுத்துவது, அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்வதில் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
 

Advertisement