Read in English
This Article is From Jan 21, 2019

அரசு முடக்கத்தையும், ட்ரம்ப்பையும் எதிர்த்து பீட்சா விற்ற புஷ்!

6000 பேர் ரகசியமாக பணியாற்றுகிறார்கள். 8 லட்சம் பேருக்கு சம்பளமும் இல்லை, வேலைக்கும் செல்வதில்லை. இதனால் அமெரிக்கா பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
உலகம் (c) 2019 The Washington Post

ஜார்ஜ் டபிள்யூ புஷ், கடந்த வெள்ளியன்று வீடு வீடாக சென்று பீட்சா விற்கும் பணியை செய்தார்

Highlights

  • ஆறு பீட்சாக்களோடு வீடு வீடாக சென்று பீட்சாவிற்கும் பணியை செய்தார் புஷ்
  • "நானும் , லாரா புஷ்ஷும் எங்களுடைய இந்த வேலைக்கு மகிழ்ச்சியடைகிறோம்"
  • 6000 ஊழியர்கள் ரகசியமாக பணியாற்றுகிறார்கள்

ஜார்ஜ் டபிள்யூ புஷ், ட்ரம்ப்பின் அரசை முடக்கும் வேலைகளை விமர்சிக்கும் விதமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். "தனது கட்சியை சேர்ந்த அதிபரையே விமர்சிக்கும் அளவுக்கு ட்ரம்பின் நடவடிக்கைகள் மாறியுள்ளது" என புஷ்ஷின் செயல் இப்போது ட்ரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த வெள்ளியன்று தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டார் புஷ். அதில் அவர் பீட்சா டெலிவரி செய்து கொண்டிருந்தார்.

அந்த பதிவில் "நானும், லாரா புஷ்ஷும் எங்களுடைய இந்த வேலைக்கு மகிழ்ச்சியடைகிறோம். இப்படிதான் பல பெடரல் பணியாளர்கள் சம்பளம் இல்லாமல் வேலைப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நானும் அவர்களுக்கு ஆதரவு தருகிறேன். அரசை முடக்குவது சரியல்ல" என்று குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட நாள்கள் அரசு முடங்கியது என்றால் அது தற்போதுதான் என்கிறது புள்ளிவிவரங்கள். தொடர்ந்து 27வது நாளாக பணிகள் முடங்கியுள்ளன. 5 மில்லியன் டாலர் மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்ட பணம் தராததால், ட்ரம்ப் அரசை முடக்கியுள்ளார்.

Advertisement

ஆறு பீட்சாக்களோடு வீடு வீடாக சென்று பீட்சாவிற்கும் பணியை செய்த புஷ், இருதலைவர்களும் அரசியல் பார்க்காமல் மக்களை கருத்தில் கொண்டு இந்த அரசு முடங்குவதை தடுக்க வேண்டும் என்றார்.

6000 பேர் ரகசியமாக பணியாற்றுகிறார்கள். 8 லட்சம் பேருக்கு சம்பளமும் இல்லை, வேலைக்கும் செல்வதில்லை. இதனால் அமெரிக்கா பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

புஷ் ஆட்சிக்காலத்தில் இது போன்ற ஒரு செயலும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் நிலவும் இந்த சூழல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று புஷ் தெரிவித்துள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement