கார்ல்ஸ்ரூஹே நகர காவல்துரை வெளியிட்ட படத்தில் உறக்க நிலையில் ‘கார்ல் ஃப்ரெட்ரிக்’
விடாமல் துரத்தப்பட்டதால் பயந்துபோய் ஓடிய ஒருவரை ஜெர்மனியில் துணிச்சல்மிக்க போலிசார்வந்து காப்பாற்றியுள்ளனர். யார் துரத்துனதுன்னு கேக்குறீங்களா? ஒரு குட்டி அணில். ஜெர்மனியின் கார்ல்ஸ்ரூஹே நகரில் கடந்த வியாழன் அன்று இந்த கலகலப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அச்சத்துடன் காவல்துறைக்கு போன் செய்து பேசிய ஒரு நபர், போலிசிடம், என்னை ஒரு குட்டி அணில் விடாமல் துரத்துகிறது, என்று புகார் செய்துள்ளார். அவர் கூறிய இடத்துக்கு ரோந்து காரில் வந்து பார்த்த போலிசார் உண்மையிலேயே அவரி ஒரு குட்டி அணில் துரத்துவதைக் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.
இறுதியாக விடாமல் துரத்திய அணிற்பிள்ளை சோர்ந்துபோய் தூங்கிவிட்டதால் துரத்தல் முடிவுக்கு வந்தது.
தூங்கிய அணிலை கார்ல்ஸ்ரூஹே நகர காவல்துறை தத்தெடுத்து கார்ல்-ஃப்ரெட்ரிக் என்று அதற்குப் பெயரிட்டுள்ளனர். மேலும் அதனைத் தங்கள் நகரத்தின் அடையாள முகணியாக (mascot) அறிவித்துள்ளனர்.
தாயைப் பிரிந்ததால்தான் அந்த அணில்பிள்ளை சாலையில் சென்றவரை ஆதரவுக்காகப் பின்தொடர்ந்துள்ளது என்று பின்னர் தெரியவந்தது. “தாயை இழக்கும்போது இவ்வாறு ஒருவரைக் குறிவைத்து அணில்கள் பின்தொடர்வது போன்றவை நடக்கும்” என்று காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
Click for more
trending news