This Article is From Nov 24, 2018

இப்படியெல்லாமா... 'உலக சாதனை செய்வீங்க'

ஜெர்மனியில் நடந்த இச்சம்பவத்தை பற்றி போலீசார் வேடிக்கையாக 'சில விஷயங்கள் நம்மிடம் சில மணிநேரம் கூட தங்காது’ எனத் தெரிவித்தனர்.

இப்படியெல்லாமா...  'உலக சாதனை செய்வீங்க'

வேகமாக சென்ற நபருக்கு கிடைத்த பரிசு

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது ஓட்டுநர் உரிமத்தை 49 நிமிடங்களில் மீண்டும் இழந்து  உலக சாதனை படைத்துள்ளார்.

ஓட்டுநர் உரிமத்தை புதிதாக வாங்கிய அந்த இளைஞன் தனது வாகனத்தில் வேகமாக சென்றுள்ளார். மணிக்கு 95 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற அந்த இளைஞரை போலீசார் நிறுத்தினர். அங்கு அனுமதிக்கப்படும் வேகம் 50 கிலோ மீட்டர் மட்டுமே. குறிப்பிட்ட வேகத்தை விட கூடுதலான வேகத்தில்  சென்றதற்காக அந்த நபரின் புதியதாக எடுக்க்பட்ட ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது.

 
 

ஜெர்மனியில் உள்ள டொர்ட்மண்டு நகரத்தில் நடந்த இச்சம்பவத்தை பற்றி போலீசார் வேடிக்கையாக 'சில விஷயங்கள் நம்மிடம் சில மணிநேரம் கூட தங்காது' எனத் தெரிவித்தனர்.

தனது நண்பர்களுடன் வேகமாக சென்று தனது திறமையை நிரூபிக்க முயன்ற அந்த இளைஞருக்கு போலீசாரால் 200 யுரோக்கள்  அபராதமும் நான்கு மாதங்களுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.

முகநூலில் இச்சம்பவம் பதிவேற்றம் செய்த நேரத்திலிருந்து உலகமெங்கும் வைரல் ஆகி வருகிறது.

 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.