எஸ் பி பாலசுப்பிரமண்யத்தின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் (courtesy ispbofficial)
ஹைலைட்ஸ்
- "Please pray for S P Balasubrahmanyam sir," tweeted actor Dhanush
- Shekhar Kapur tweeted: "Praying for the great singer"
- Composer Ilaiyaraaja shared an emotional message
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 25 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், சமீபத்தில் பிரபல பாடகரான எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடல் நிலையில் சிறிதளவு பின்னடைவு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமிருந்தன. இந்நிலையில், அவரது உடல் நிலை சீராக உள்ளதாக அவரது மகன் சரண் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
அவரைத் தொடர்ந்து தற்போது, ஏ. ஆர் ரஹ்மான் “ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் எஸ்.பி.பியின் உடல் நலம் விரைவாக குணமடைய வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அனைவரும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.” டிவிட் செய்துள்ளார்.
முன்னதாக பிரபல இசையமைப்பாளரான இளையராஜா உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். நட்பு முரண்களை கடந்து, “விரைவில் திரும்பி வாருங்கள்” என அவருடைய உடல் நலத்திற்காக வேண்டிக்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா “விரைவில் குணமடையுங்கள்” என டிவிட் செய்துள்ளார். மேலும், பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளர்களான சேகர் கபூர் மற்றும் போனி கபூர் ஆகியோரும் எஸ் பி பாலசுப்பிரமண்யம் குணமடைய தங்களது விருப்பத்தினை தெரிவித்துள்ளனர். “எஸ் பி பாலசுப்பிரமண்யம் விரைவாக குணமடைய வேண்டும், என்று பிரார்த்தனை செய்கிறேன்” என போனி கபூர் ட்வீட் செய்திருந்தார். “சிறந்த பாடகருக்காக பிரார்த்தனை” என சேகர் கபூர் எழுதினார் அவருடைய கருத்தினை தெரிவித்திருந்தார்.
எஸ்.பி.பி அனுமதிக்கப்பட்டுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மருத்துவ சேவைகளின் உதவி இயக்குநர் டாக்டர் அனுராதா பாஸ்கரன் மருத்துவமனை அறிக்கையில் “கோவிட் -19 காரணமாக எம்ஜிஎம் ஹெல்த்கேரில் அனுமதிக்கப்பட்டுள்ள திரு எஸ்.பி. அவரது மருத்துவ அளவுருக்களை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்” என கூறியிருந்தார்.
ஆகஸ்ட் 5 ம் தேதி வீடியோ ஒன்றில் எஸ்.பி.பி, “கடந்த இரண்டு, மூன்று நாட்களில், எனக்கு கொஞ்சம் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. சிறிதளவு நெஞ்சு எரிச்சல். இது ஒரு பாடகருக்கு முட்டாள்தனம். குளிர் மற்றும் காய்ச்சல் இருந்தது. இந்த மூன்று விஷயங்கள், இல்லையெனில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நான் அதை எளிதாக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை, எனவே நான் மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்தேன். இது ஒரு லேசான கொரோனா அறிகுறி என அவர்கள் சொன்னார்கள். நான் வீட்டிலேயே இருக்க முடியும், என்னை நானே தனிமைப்படுத்திக் கொள்ள முடியும் என்று அவர்கள் சொன்னார்கள், ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை.” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
(With PTI inputs)