சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
Hyderabad: மனித உறவுகள் என்பது ஒவ்வொரு நாட்டின் பண்பாட்டு கலாச்சாரத்தின் பின்னணியுடன் பின்னி பிணைந்துள்ளது. ஒவ்வொரு மதத்திலும் மனித உறவுகள் குறித்த போதனைகளும், விளக்கங்களும் தவறாமல் இடம் பிடித்துள்ளன. இதன் அடிப்படையிலேயே மனித உறவுகளில் எது தவறு எது சரி என பொதுச் சமூகம் தீர்மானிக்கின்றது.
இப்படியான சூழலில் ஹைதராபாத்தில் ஐந்து வயது சிறுமியை கொன்று, மற்றொரு நபரையும் கொலை செய்ய முயற்சித்து, தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாயுடன் பழக்கத்தில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் இந்த கொலையையும், கொலை முயற்சியையும் செய்துள்ளார். சிறுமியின் தாயார், இந்த நபரை தவிர்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் இந்த நபர் சிறுமியின் தாயரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவருக்கும் பொதுவான மற்றொரு நண்பர் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த நபர், சிறுமியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். பின்னர் இருவருக்கும் பொதுவான அந்த நண்பரையும் கொலை செய்ய முயன்றுள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துக்கொள்ள பிளேடால் கழுத்தில் கீறியுள்ளார்.
சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்தை அடைந்த காவல்துறையினரை உள்ளூர்வாசிகள் எச்சரித்து குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது, பாதிக்கப்பட்டவரின் தாயுடன் பழகியிருந்தது உண்மையென குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டார்.
இருப்பினும் அவர் ஏன் அந்தப் பெண்ணைத் தாக்கினார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தாக்குதல் நடத்தியவரும் காயமடைந்த மற்றொருவரும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.