This Article is From Apr 30, 2020

காய்கறி வங்க சென்ற மகன் மனைவியுடன் வீடு திரும்பதியதால் தாய் அதிர்ச்சி!

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹரித்வாரில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் வைத்து இவர்களது திருமணம் நடந்துள்ளது.

காய்கறி வங்க சென்ற மகன் மனைவியுடன் வீடு திரும்பதியதால் தாய் அதிர்ச்சி!

காய்கறி வங்க சென்ற மகன் மனைவியுடன் வீடு திரும்பதியதால் தாய் அதிர்ச்சி!

ஹைலைட்ஸ்

  • காய்கறி வங்க சென்ற மகன் மனைவியுடன் வீடு திரும்பதியதால் தாய் அதிர்ச்சி!
  • இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹரித்வாரில் இவர்களது திருமணம் நடந்துள்ளது.
  • தனது மகன் மீது நடவடிக்கை எடுக்கும் படி, தாயார் புகார்
Ghaziabad:

உத்தர பிரதேசத்தில் காய்கறி வங்குவதற்காக சென்ற மகன் மனைவியுடன் வீடு திரும்பதியதால் தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். 

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் காய்கறி வங்குவதற்காக சென்ற நபர் ஒருவர் மனைவியுடன் வீடு திரும்பியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த நபரின் தாயார் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து, தனது மகன் மீது நடவடிக்கை எடுக்கும் படி, ஷாகிபாபாத் காவல் நிலையத்தில் தாயார் புகார் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கண்ணீருடன் அந்த தாயார் கூறியதாதவது, தான் தனது மகனை மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு அனுப்பி வைத்தாகவும், ஆனால், மகன் திரும்பி வரும்போது மனைவியை அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தான் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்று கண்ணீருடன் அவர் தெரிவித்துள்ளார். 

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஹரித்வாரில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் வைத்து இவர்களது திருமணம் நடந்துள்ளது. இந்த புதுமணத் தம்பதிகளும் ஊரடங்கு முடிந்ததும் தங்களுக்கு திருமண சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். 

இதுதொடர்பாக அந்த தாயின் மகனான குட்டு கூறும்போது, தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் ஹரித்வாருக்கு செல்ல முடியவில்லை. அதனால் டெல்லியில் உள்ள வாடகை வீட்டில் எனது மனைவியை தங்க வைத்தேன். ஊரடங்கு உத்தரவால் வீட்டை விட்டு வெளியேறும்படி, வீட்டு உரிமையாளர் கூறியதால், மனைவியை என்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்தேன் ' என கூறியுள்ளார். 

இருவரையும் வீட்டில் தங்க வைக்க குட்டுவின் தாய் அனுமதிக்காததால், ஊரடங்கு முடியும் வரை சவிதா தங்கியிருந்த வாடகை வீட்டிலேயே இருவரும் தங்க அனுமதிக்குமாறு வீட்டு உரிமையாளரிடம் காவல்துறையினர் பேசியுள்ளனர்.

With inputs from ANI

.