ஹைலைட்ஸ்
- தினமும் நெய் சாப்பிட்டு வரலாம்.
- 3 முதல் 6 தேக்கரண்டிகள் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- மூக்கடைப்பை சரி செய்ய நெய் சாப்பிடலாம்.
உயர் இரத்த அழுத்தம், மலச்சிக்கல், அசிடிட்டி, மூட்டு வலி, நீரிழிவு நோய், இருதய நோய்கள், பிசிஓடி போன்ற பிரச்னைகளை தவிர்க்க தினமும் ஒரு தேக்கரண்டி நெய்யை காலை, மதியம் மற்றும் இரவு நேர உணவுகளில் சேர்த்து சாப்பிடலாம். நெய் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் கொலஸ்ட்ரால் பிரச்னை ஏற்படும் என்றும் நம்மில் சிலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை ஆகியவற்றை சீராக வைக்க நெய் சாப்பிடலாம். உணவில் எப்படி நெய் சேர்த்து கொள்வது என்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்தும் பார்க்கலாம்.
1. மதிய நேரம் நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் நெய் சேர்த்து சாப்பிடுவதால் மாலை நேரத்தில் ஏற்படக்கூடிய பசி நீங்கும்.
2. மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்னை இருப்பவர்கள் இரவு நேர உணவில் நெய் சேர்த்து சாப்பிடலாம். இதனால் இரவு நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்தை பெற முடியும்.
3. கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் தாராளமாக நெய் சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை குணமாகும்.
4. தினமும் 3 முதல் 6 தேக்கரண்டி நெய் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகளில் நெய் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
5. நெய் வாங்கும்போது பசு நெய்யை தேர்ந்தெடுத்து வாங்குங்கள். அதைவிட வீட்டிலேயே நெய் தயாரிப்பது இன்னும் சிறப்பான விஷயம்.
6. இந்தியா தவிர்த்து பிற நாடுகளில் இருப்பவர்கள் ஆர்கானிக் வெண்ணெய் வாங்கி பயன்படுத்தலாம்.
7. பருவ மாற்றத்தின்போது நெய் சாப்பிடுவதால் உடலில் வெப்பநிலை சீராக இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
8. முக்கடைப்பு ஏற்பட்டால் நெய் சாப்பிடலாம். ஆயுர்வேத குறிப்புகளின்படி, சில துளிகள் வெதுவெதுப்பான நெய்யை மூக்கில் விட்டால் மூக்கடைப்பு குணமாகும். காலை எழுந்தவுடன் இதனை செய்வதால் நிவாரணம் கிடைக்கிறது.
9. நெய் சாப்பிடுவதால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது. இதனால் நாள் முழுக்க புத்துணர்வாக இருக்க முடிகிறது.
10. ரொட்டி தயாரிக்கும்போது அதன்மேல் நெய் தடவலாம். இதனால் ரொட்டியில் இருக்கும் க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவதோடு செரிமானமும் சிறப்பாக இருக்கும்.