This Article is From Jun 10, 2019

81 வயதில் காலமான கிரிஷ் கர்னாட்: ஜனாதிபதி, பிரதமர், கமல் உள்ளிட்டோர் அஞ்சலி!

பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் ஆவார். 

81 வயதில் காலமான கிரிஷ் கர்னாட்: ஜனாதிபதி, பிரதமர், கமல் உள்ளிட்டோர் அஞ்சலி!

கிரிஷ் கர்னாடுக்கு, 1974 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கிரிஷ் கர்னாட் கவுரிவிக்கப்பட்டார். 

ஹைலைட்ஸ்

  • Girish Karnad died in Bengaluru today at the age of 81
  • President Kovind and PM Modi posted condolence messages
  • Kamal Haasan remembered Girish Karnad as an inspiration
New Delhi:

பழம்பெரும் நடிகரான கிரஷ் கர்னாட் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். அவருக்கு 81 வயது ஆனது. அவருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  

காதலன், காதல் மன்னன், ரட்சகன் உள்ளிட்ட பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார் கிரிஷ் கர்னாட். பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ள கிரிஷ் கர்னாட், மேடை நாடகங்களிலும் தனக்கென தனிப் பெயரைப் பெற்றவர் ஆவார். 

கிரிஷ் கர்னாடுக்கு, 1974 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கிரிஷ் கர்னாட் கவுரிவிக்கப்பட்டார். 

1938 ஆம் ஆண்டு, மே 19 ஆம் தேதி மும்பையில் பிறந்தவர் கிரிஷ் கர்னாட். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் கல்வி பயின்றார். அங்குதான் அவர் ‘யாயதி' என்கிற நாடகத்தை எழுதினார். அந்த நாடகத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். அதேபோல அவர் எழுதிய ‘துக்ளக்' (1964) மற்றும் ‘ஹயவாதனா' (1972) ஆகிய நாடகங்களும் பலரால் பாராட்டப்பட்டது.

உலக சினிமாவிலும் அவர் தனி அக்கறை எடுத்துக் கொண்டார். 1970 ஆம் ஆண்டு ‘சம்ஸ்காரா' என்கிற கன்னட திரைப்படத்துக்கு திரைக்கதை எழுதினார்.

ஜனாதிபதி கோவிந்த், கிரிஷ் கர்னாட் குறித்து, “எழுத்தாளர், நடிகர், இந்திய நாடகத் துறையின் வித்தகர் கிரிஷ் கர்னாட் மறைவுச் செய்தி கேட்டு வருந்துகிறேன். நமது கலாசார உலகம் இன்று வறண்டு கிடக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அவரைப் பின்பற்றியவர்களுக்கும் எனது இரங்கல்கள்” என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி, “அனைத்துத் தளங்களிலும் தனது பிரமாதமான நடிப்புக்காக கிரிஷ் கர்னாட் நினைவுகூறப்படுவார். அவருக்கு நெருக்கமானவைகள் குறித்து மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசிவந்தார். அவரது படைப்புகள் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும். அவரது இறப்புச் செய்தியினால் வருந்துகிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று உருக்கமாக கூறியுள்ளார். 

அதேபோல கமல்ஹாசன், “அவரது கதைகள் என்னை பிரமிக்கவைத்தன. எழுத்தாளராக நினைக்கும் நிறைய பேருக்கு அவர் ஓர் முன்னுதாரணம். அவர்களின் எழுத்துகள் இழப்பைச் சற்று ஈடு செய்யும்” என்றார். 

.