This Article is From Oct 29, 2019

தன் குழந்தை நீரில் மூழ்குவதை அறியாமல் சுஜித் மீட்பு பணியை டிவியில் பார்த்த பெற்றோர்!!

ஆழ் துளைக் கிணறுக்குள் சிக்கிய சிறுவனை மீட்கும் நடவடிக்கை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை 3 வயது பெண் குழந்தையின் பெற்றோர் பார்த்துக்கொண்டிருந்தபோது தண்ணீர் பாத்திரத்தில் மூழ்கி குழந்தை பலியானது.

தன் குழந்தை நீரில் மூழ்குவதை அறியாமல் சுஜித் மீட்பு பணியை டிவியில் பார்த்த பெற்றோர்!!

கடந்த வெள்ளிக் கிழமை மாலை முதற்கொண்டு 80 மணிநேரம் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடந்தன.

Tuticorin:

தனது குழந்தை தண்ணீர் வாளிக்குள் மூழ்குவதை தெரியாமல், தூத்துக்குடியைச் சேர்ந்த பெற்றோர் சிறுவன் சுஜித் மீட்பு பணியை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களது குழந்தையை அவர்கள் தேடியபோது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. 

திருச்சியில் சிறுவன் சுஜித்தை மீட்கும் நடவடிக்கைகள் தோல்வியை தழுவின. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் சுர்ஜித்தின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. 

கடந்த வெள்ளிக் கிழமை மாலை முதற்கொண்டு 80 மணிநேரம் தொடர்ச்சியாக மீட்பு பணிகள் நடந்தன. இந்த காட்சிகள் டிவிக்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. 

அப்போது, தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரத்தை சேர்ந்த பெற்றோர் தங்களது வீட்டில் சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தனர். இதற்கிடையே அவர்களது செல்ல மகள் ரேவதி சஞ்சனா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.

பெற்றோர் டிவியில் மூழ்கிய அதே நேரத்தில் சஞ்சனா  பெரிய சைஸிலான தண்ணீர் வாளிக்குள் ஏறிக் குதித்தார். தண்ணீருக்குள் மூழ்கிய சிறுமி தத்தளிக்கத் தொடங்கி, பின்னர் ஒரு கட்டத்தில் மூச்சுத்திணறி மயக்கம் அடைந்தார். 

சிறிதுநேரம் கழித்து மகளைத் தேடிய பெற்றோர், சஞ்சனா தண்ணீர் வாளியில் மூழ்கி மயங்கியதை பார்த்து அதிர்ச்சியிடைந்தனர். உடனடியாக சிறுமி சஞ்சனா அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

.