This Article is From Oct 05, 2018

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை: 7 போலீசார் உட்பட 18 பேர் கைது!

சிறுமி கொடுத்த புகாரின் பேரில், 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை: 7 போலீசார் உட்பட 18 பேர் கைது!

18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Kaithal (Haryana):

கடந்த மாதம் தனது வீட்டில் உதவி ஆய்வாளர் பதவியிலிருக்கும் ஒருவர் தன்னிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக உயர் அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் கூறியுள்ளார்.

ஹரியானாவில் கடந்த மாதம் தாய் மற்றும் அவருடைய 16 வயது மகளை உதவி ஆய்வாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இது தொடர்பாக 7 போலீஸ் அதிகாரிகள் உட்பட 18 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், நேற்று காவலர், தலைமைக் காவலர் உட்பட 18 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் மீது இந்திய தண்டனை சட்டமான கற்பழிப்பு, சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், குற்றவியல் சதி, போஸ்கோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல் ஆய்வாளர் ஆஸ்தா மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய டிஎஸ்பி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

.