Read in English
This Article is From May 02, 2019

முளைச்சி மூணு இலை விடல... பறவையை எப்படி ட் ரெயின் பண்ணியிருக்கு பாருங்க...! வைரலாகும் வீடியோ

இந்த வீடியோவில் சிறுமி கேமராவை வைத்திருப்பவர்களை பார்த்துக் கத்தியவுடனே அவள் வளர்க்கும் பறவை கேமரா வைத்திருப்பவரை தாக்குகிறது.

Advertisement
விசித்திரம் Edited by

லோர்ட் ஃப்ளோகோ என்பவர் “என்னுடைய மருமகள் தன் பறவையை பிறரைத் தாக்கும் அளவிற்கு தயார்படுத்தி இருக்கிறாள்” என்று எழுதியுள்ளார்.

ரஷ்யாவிற்காக உளவு பார்த்த திமிங்கலத்தை பார்த்திருப்போம்… அதுபோல் ஒரு குட்டிப் பெண் தனது சொந்த நலனுக்காக வளர்க்கும் பறவையை யாரை தாக்க விரும்புகிறாளோ அவர்களை நோக்கி கத்தினால் அந்தப் பறவை அவர்களைத் தாக்குகிறது. 

இந்த வீடியோ ட்விட்டரில் இன்று பகிரப்பட்டது. பகிரப்பட்ட சில மணி நேரங்களில் இந்த வீடியோ19.8 மில்லியன்  மக்களால் பார்க்கப்பட்டுள்ளது. லோர்ட் ஃப்ளோகோ என்பவர் “என்னுடைய மருமகள் தன் பறவையை பிறரைத் தாக்கும் அளவிற்கு தயார்படுத்தி இருக்கிறாள்” என்று எழுதியுள்ளார். 

இந்த வீடியோவில் சிறுமி கேமராவை வைத்திருப்பவர்களை பார்த்துக் கத்தியவுடனே  அவள் வளர்க்கும் பறவை கேமரா வைத்திருப்பவரை தாக்குகிறது. உடனடியாக வீடியோவும் அதோடு நின்றும் விடுகிறது.

ட்விட்டரில் பலரும் சிறுமியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். “இந்தப் பெண்ணுக்கு பவர் உள்ளதாகக்”  கூறுகின்றனர். 

Advertisement
Advertisement