This Article is From Oct 08, 2018

பிரதமர் மோடிக்கு 2019-ல் மீண்டும் வாய்ப்பளியுங்கள்: சுஷில் மோடி

பீகார் மாநிலத்தில் மதுபானியில் மிகவும் பின் தங்கிய மக்களை சந்தித்து பேசிய சுஷில் மோடி ‘நீங்கள் கண்டிப்பாக நரேந்திர மோடிக்கு 2019ல் மீண்டும் பிரதமராக வாய்ப்பளிக்க வேண்டும்’ என கூறினார்.

பிரதமர் மோடிக்கு 2019-ல் மீண்டும் வாய்ப்பளியுங்கள்: சுஷில் மோடி

ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டு சதி செய்து தேசிய ஜனநாயக கட்சியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறார்கள் அவர்களை தோற்கடிக்க மக்கள் உதவ வேண்டும்.

Madhubani, Bihar:

பீகாரின் துணை முதல்வர் சுஷில் குமார் ஞாயிறன்று பொதுமக்களை சந்தித்தார். அப்போது, அடுத்த வருடம் வரு இருக்கும் பொதுத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் பிரதமராகும் வாய்ப்பினை அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

2005-ம் ஆண்டு நவம்பரில் ஆட்சிக்கு வந்த பாஜக மற்றும் ஜனதா தளம் மிகவும் பின்தங்கிய மக்களுக்கான 20 சதவீத ஒதுக்கீட்டை வழங்கியது என்று சுஷில் மோடி கூறினார்.

பீகாரின் மாதுபானிப் பகுதியில் மிகவும் பின்தங்கிய மக்களை சந்தித்த சுஷில் மோடி 2019 லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் பிரதமராக வாய்ப்பளிக்க வேண்டும் என்றார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி, கட்சியின் ஆட்சியை வீழத்த நினைக்கும் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் கூட்டு சதியை உடைக்க உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். இப்பகுதியில், 15 வருடங்களாக ஆட்சி புரிந்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் மிகவும் பின்தங்கிய மக்களை மோசமாக நடத்தினார்கள் என்றார்.

.