Read in English
This Article is From Jun 13, 2020

கொரோனாவால் உலகம் முழுவதும் 4.25 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!!

ஐரோப்பாவில் 23,63,538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,86,843 பேர் உயிரிழந்துள்ளனர்.  லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தொடர்ந்து தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு 15,69,938 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 76,343 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Advertisement
உலகம்

4,25,282 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 76,32,517 பேர் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Paris:

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 4,25,000ஐ கடந்துள்ளது. ஏஎஃப்பி செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி 4,25,282 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 76,32,517 பேர் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் 23,63,538 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 1,86,843 பேர் உயிரிழந்துள்ளனர்.  லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் தொடர்ந்து தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு 15,69,938 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 76,343 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்கா கொரோனா தொற்றை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து திணறி வருகிறது. இதுவரை 1,14,643 பேர் இந்நாட்டில் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக பிரேசில் உள்ளது. இங்கு 41,828 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் 41,481 பேர் உயிரிழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து இத்தாலியில் 34,2236 பேரும், பிரான்ஸில் 29,374 பேரும் உயிரிழந்துள்ளனர்.

Advertisement