இன்னும் 5 ஆண்டுகளில் இந்தியாவின் பங்களிப்பு உலக பொருளாதாரத்தில் 15.5 சதவீதமாக இருக்கும் என கருதப்படுகிறது.
ஹைலைட்ஸ்
- The US is projected to fall to third place
- Indonesia will remain in the fourth spot
- Russia may displace Japan as the number five growth contributor
இனிவரும் 5 ஆண்டுகளில் உலக பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முதல் 20 நாடுகள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. இதில் இந்தியாவும் முக்கிய சக்தியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் காணப்படும் மந்த நிலை காரணமாக, பொருளாதார வளர்ச்சி பெரும்பாலான நாடுகளில் மந்தமமாகவே காணப்படுகிறது. இந்த நிலை அடுத்த ஆண்டுகளில் மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லும் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
உலகின் மொத்த உற்பத்தியில் சீனாவின் பங்களிப்பு 2018-19-ம் ஆண்டு நிலவரப்படி 32.7 சதவீதமாக இருந்தது. இந்த விகிதம் 2024-ல் படிப்படியாக குறைந்து 28.3 சதவீதத்தை எட்டக் கூடும்.
சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கலாம். 2024-ல் உலக ஜிடிபியில் இந்தியாவின் பங்களிப்பு 15.5 சதவீதமாக உயரும். இதற்கு அடுத்தபடியாக 3 இடத்தை அமெரிக்கா பிடிக்கும். 2024-ல் அமெரிக்காவின் ஜிடிபி பங்களிப்பு 9.2 சதவீதமாக இருக்கும். தற்போது 13.8 சதவீதமாக உலகின் மொத்த உற்பத்தி திறனில் அமெரிக்காவின் பங்கு உள்ளது.
4-வது இடத்தில் இந்தோனேசியா இடம்பெறலாம். 3.7 சதவீத வளர்ச்சியை அந்நாடு எட்டும். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிரிட்டன், ரஷ்யா, ஜப்பான் நாடுகள் உள்ளன. தற்போது 11-வது இடத்தில் இருக்கும் பிரேசில் 6-வது இடத்திற்கும், ஜெர்மனி 7-வது இடத்திற்கும் முன்னேறலாம்.
சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்பின்படி, மேற்கண்ட நாடுகளை தவிர்த்து துருக்கி, மெக்சிகோ, பாகிஸ்தான், சவுதி அரேபியா, ஸ்பெயின், போலந்து, கனடா, வியட்நாம் ஆகிய நாடுகளும் பொருளாதார சக்திகொண்ட முதல் 20 நாடுகள் பட்டியலில் அடுத்த 5 ஆண்டுகளில் இடம்பெறலாம்.