Read in English
This Article is From Dec 17, 2019

கல்லூரி மாணவர்கள் மீதான வன்முறை : உயர் நீதிமன்றத்தை நாடச் சொன்னது உச்ச நீதிமன்றம்

இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement
இந்தியா Edited by

நாங்கள் உண்மைகளை அறிந்து நேரத்தை செலவிட விரும்பவில்லை - உச்ச நீதிமன்றம்

New Delhi:

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் போது டெல்லியின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடவடிக்கை குறித்து நீதி விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. ஒரு உயர் நீதிமன்றம் உண்மை கண்டறியும் குழுக்களை நியமிக்க முடியும் என்றும் மனுதாரர்களை உயர் நீதிமன்றங்களை அணுகுமாறு கேட்டுக் கொண்டது.

"நாங்கள் உண்மைகளை அறிந்து நேரத்தை செலவிட விரும்பவில்லை, நீங்கள் முதலில் கீழே உள்ள நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டும்" என்று இந்திய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு கூறியது.

வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங் மற்றும் கோலின் கன்ஸ்லேவ்ஸ் ஆகியோர் இரண்டு பல்கலைக்கழகங்களிலும் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடுகையில் போராட்டம் குறித்து பணியில் இருந்த காவதுறையினரிடம் விசாரிக்க வேண்டும் எனக்கூறினார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், போராட்டம் அமைதியாக நடந்தது என்றால்  பொதுச் சொத்து ஏன் அழிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியவர் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தரவிட்டார். 

Advertisement
Advertisement