கோவா கவர்னர் சத்ய பால் மாலிக் ஒரு பொது நிகழ்ச்சியில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
Baghpat, UP: கோவா ஆளுநர் சத்ய பால் மாலிக் ஞாயிற்றுக்கிழமை, நாட்டின் ஆளுநர்களுக்கு "அதிக வேலை இல்லை" என்று கூறினார். ஜம்மு-காஷ்மீரில், ஆளுநர் "மது குடித்து கோல்ஃப் விளையாடுகிறார்." என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் திரு மாலிக் உத்தரப்பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
"ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை. காஷ்மீர் ஆளுநராக இருக்கும் ஒருவர் வழக்கமாக மது அருந்தி கோல்ஃப் விளையாடுவார். மற்ற மாநிலங்களின் ஆளுநர்கள் எந்தவொரு சச்சரவிலும் ஈடுபடுவதைத் தவிர்த்து விடுகிறார்கள்" என்று ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநரும், தற்போதைய கோவா ஆளுநருமாகிய சத்ய பால் மாலிக் கூறியுள்ளார்.