This Article is From Aug 18, 2020

கோவா ஆளுநர் சத்யபால் மாலிக் மேகாலாயாவுக்கு இடமாற்றம்!

தொடர்ந்து, மகராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கூடுதலாக கோவா மாநிலத்தை கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கோவா ஆளுநர் சத்யபால் மாலிக் மேகாலாயாவுக்கு இடமாற்றம்!

கோவா ஆளுநர் சத்யபால் மாலிக் மேகாலாயாவுக்கு இடமாற்றம்!

New Delhi:

கோவா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை மேகாலாயாவுக்கு இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் அவர் மூன்றாவது முறையாக மாற்றப்படுகிறார். தொடர்ந்து, மகராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கூடுதலாக கோவா மாநிலத்தை கவனித்துக்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சத்யபால் மாலிக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் கோவா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பரிவு 370 நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட போது, அவர் ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக பதவி விகித்தார். 

இதன் பின்னர் இரண்டு மாதங்களுக்கு பின்னர் அவர் கோவாவுக்கு மாற்றப்பட்டார். ஜம்மு-காஷ்மீரில் ஆளநராக நியமிக்கப்படுவதற்கு முன்பாக, ஒரு வருட காலம் பீகார் ஆளுநராக இருந்து வந்தார். 

அண்மையில், கடலோர மாநிலமான கோவாவில் கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து பாஜக தலைமையிலான கோவா அரசின் முதல்வர் பிரமோத் சாவந்த் உடன் மாலிக் உடன்படவில்லை. தொடர்ந்து, கொரோனா நிலவரம் குறித்து ஊடகங்களில் தவறான தகவல்கள் தருவதாக மாலிக்கை மேற்கோள் காட்டி முதல்வர் அறிக்கை வெளியிட்ட போதும், அதனை அவர் கடுமையாக மறுத்து வந்தார். 

இதுதொடர்பாக மாலிக் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டிஇல், இது முதலமைச்சரின் ஒரு பெரிய முறைகேடாகும். ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் அல்லது சமூக ஊடகங்களுக்கு எதிராக நான் ஒருபோதும் எதுவும் சொல்லவில்லை. ஊடகங்கள் எங்கள் பலம். 

தகவலின் அடிப்படையிலே, நான் ஒரு கூட்டத்தை அழைத்தேன். சொல்வது தவறு. இது மிகவும் முறையற்றது. எந்தவொரு நாகரிக மனிதனும் அதைச் செய்யக்கூடாது "என்று சாவந்த் கருத்துகள் குறித்து மாலிக் கூறினார். 

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் புதிய ராஜ்பவனுக்கான கோவா அரசின் திட்டத்தையும் கடுமையாக மாலிக் விமர்சித்திருந்தார். இது போன்ற தொற்றுநோய் தாக்கத்தால் அரசு பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பகுத்தறிவற்ற மற்றும் விவேகமற்ற செயல் என்று விமர்சித்திருந்தார். 

ஜம்மு-காஷ்மீரில் அவர் பணியாற்றிய போதும், மாலிக் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தார். 2018ஆம் ஆண்டில் உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதாக பி.டி.பி தலைவர் மெஹபூபா முப்தியிடமிருந்து தனக்கு கடிதம் கிடைக்கவில்லை என்று அவர் கூறியது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ராஜ் பவனில் உள்ள தொலைநகல் இயந்திரத்தை அதற்கு அவர் குற்றம்சாட்டியிருந்தார். அதை இயக்க எந்த ஊழியர்களும் இல்லாததால் அன்று வேலை செய்யவில்லை என்று கூறியிருந்தார்.

.