This Article is From Jul 01, 2020

நாளை முதல் சுற்றுலா சேவையை மீண்டும் தொடங்குகிறது கோவா! 250 ஓட்டல்களுக்கு அனுமதி

கொரோனா பாதிப்பு இல்லாத சுற்றுலா பயணிகள் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Advertisement
இந்தியா Edited by

பதிவு செய்யப்படாத ஓட்டல்கள் திறக்க அனுமதி கிடையாது என்று கோவா அரசு தெரிவித்துள்ளது.

Highlights

  • சுற்றுலா சேவையை மீண்டும் தொடங்குவதற்கு கோவா அமைச்சரவை முடிவு
  • முதற்கட்டமாக 250 ஓட்டல்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சுற்றுலா விடுதிகள் செயல்படத் தொடங்கும்.
Panaji:

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ள நாட்டின் முக்கிய சுற்றுலா மாநிலமான கோவா, தனது சுற்றுலா சேவையை மாநில அளவில் நாளை முதற்கொண்டு தொடங்கவுள்ளது. இதையொட்டி, மொத்தம் 250 ஓட்டல்கள் நாளை முதல் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் கோவாவில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சுற்றுலா சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மார்ச் கடைசியில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்த பின்னர், சுற்றுலா தொழில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை முதற்கொண்டு சுற்றுலா சேவையை மீண்டும் தொடங்குவதற்கு கோவா அமைச்சரவை முடிவு எடுத்திருக்கிறது.

Advertisement

முதற்கட்டமாக 250 ஓட்டல்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு சுற்றுலா விடுதிகள் செயல்படத் தொடங்கும்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முன்கூட்டியே பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு மாநில சுகாதார அமைச்சகம் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பதிவு செய்யப்படாத ஓட்டல்கள் திறக்க அனுமதி கிடையாது என்று கோவா அரசு தெரிவித்துள்ளது.

இதேபோன்று கொரோனா பாதிப்பு இல்லாத சுற்றுலா பயணிகள் மட்டுமே மாநிலத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒருவேளை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement