Panaji: கோவாவில் புகழ்பெற்ற மங்குஷி கோவில் உள்ளது. அங்கு பணிபுரியும் கோவில் பூசாரி, வழிபாட்டுக்கு வந்த பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக பெறப்பட்ட பாலியல் புகாரை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை கோவாவில் உள்ள புகழ்பெற்ற மங்குஷி கோவிலில் பணிபுரியும் பூசாரி, அங்கு வரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், அந்த பூசாரி மீது 354வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த புகார் குறித்த விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அந்த பூசாரி மீது புகார் அளித்த இரண்டு பெண்களிள் ஒருவர், அமெரிக்காவில் மருத்துவம் படித்து வருபவர். அவர் தெரிவித்த புகாரின் அடிப்படையில், பரிகார பூஜையின் போது தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகத் தெரிவித்துள்ளார்.