Read in English
This Article is From Nov 05, 2018

பயணிகளின் லக்கேஜை ஶ்ரீநகரிலேயே விட்டுச் சென்ற கோ-ஏர் விமானம்!

பயணிகளின் லக்கேஜ்கள் இன்னொரு விமானத்தில் கொண்டு வரப்படும் என்றும், அது அந்த நாளின் இறுதியில் ஜம்மு வந்தடையும் என்றும் தெரிவித்தார்

Advertisement
நகரங்கள்

பயணிகளின் லக்கேஜ்கள் இன்னொரு விமானத்தில் கொண்டு வரப்படும் என்று கோ-ஏர் ஊழியர் தெரிவித்தார்

Srinagar:

கோ-ஏர் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஶ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்குப் புறப்பட்டது. வந்த பயணிகளின் லக்கேஜ்கள் அந்த விமானத்தில் கொண்டு வரபடவில்லை என்று அறிந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

"ஶ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு கோ-ஏர் ஜி8-213 விமானத்தில் வந்தோம் ஆனால், எங்களின் லக்கேஜ்கள் அந்த விமானத்தில் ஏற்றப்படவில்லை" என்று அந்த விமானத்தில் பயணம் செய்த அப்துல் ஹமித் பிடிஐ-க்கு போனில் தகவல் தெரிவித்தார்.

எல்லா பயணிகளை லக்கேஜ்கள் பெற்றுக்கொள்ள காத்திருக்க சொன்னார்கள். ஆனால், சிறிது நேரம் கழித்து, விமானப் பணியாளர் அனைவரின் லக்கேஜ்களும் அடுத்த விமானத்தில் இன்று கொண்டு வரப்படும் என்று தெரிவித்ததாக அவர் கூறினார்.

"ஒரு மணி நேர காத்திருப்புக்குப் பின்னர், எங்களின் லக்கேஜ்களை மறுநாள் வந்து பெற்றுகொள்ளுபடி கூறினார்கள்" என்றார்.

Advertisement

கோ-ஏர் நிறுவனம் இதுகுறித்து எந்த மெயிலும் அனுப்பவில்லை. கோ-ஏர் நிறுவன இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மெயில் ஐடிக்கு அனுப்பப்படும் மெயில்களும் பௌன்ஸ் ஆகின்றன. கஸ்டமர் கேர் எண்களைத் தொடர்பு கொண்டார், இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் பேச அனுமதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

Advertisement