This Article is From May 27, 2019

“250-ஐ தாண்டக் கூடாது கடவுளே…”- பாஜக-வுக்கு ஜெகன் ரெட்டியின் ஸ்பெஷல் ப்ரேயர்!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது

“250-ஐ தாண்டக் கூடாது கடவுளே…”- பாஜக-வுக்கு ஜெகன் ரெட்டியின் ஸ்பெஷல் ப்ரேயர்!

ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 175 தொகுதிகளில் 151 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது

New Delhi:

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, லோக்சபாத் தேர்தலையொட்டி கடவுளிடம் பாஜக-வுக்காக தான் என்ன வேண்டினார் என்பது குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது, “பாஜக கூட்டணிக்கு 250 தொகுதிகளுக்கு மேல் வெற்றித் தந்து விடாதே என நான் கடவுகளை வேண்டினேன்” என்று கூறியுள்ளார் ஜெகன். 

பெரும்பான்மையைப் பெற இருக்கும் 272 என்ற இலக்கை பாஜக அடையாமல் இருந்திருந்தால், ஆந்திராவுக்கு ‘சிறப்பு அந்தஸ்து' வாங்கும் கோரிக்கையை தன்னால் முன் வைத்திருக்க முடியும் என்று நம்பியுள்ளார் ஜெகன். அதன் காரணமாகவே, அப்படி பிரார்த்தித்து உள்ளார்.

“நான் கடவுளிடம் வேண்டினேன். 250 இடங்களைத் தாண்டி ஒரு இடத்தைக் கூட அவர்களுக்குக் கொடுத்து விடாதே என்று. ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக இடங்களை கடவுகள் அவர்களுக்குத் தந்து விட்டார். எனக்கு ஆந்திராவில் கொடுத்துள்ளதைப் போல” என்று கூறியுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக 303 இடங்களை வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. அதைப் போலவே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் இருக்கும் 175 தொகுதிகளில் 151 இடங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. மேலும் லோக்சபா தேர்தலில் ஜெகன் மொத்தம் உள்ள 25 இடங்களில் 22-ஐ கைப்பற்றினார். இதன் மூலம் பாஜக, காங்கிரஸ், திமுக-வுக்குப் பிறகு தேசிய அளவில் நான்காவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ். 

“பாஜக-வுக்கு மட்டும் 250 இடங்களுக்கும் குறைவாக கிடைத்திருந்தது என்றால், எல்லாவற்றுக்கும் மத்திய அரசை நம்பி இருந்திருக்கத் தேவையில்லை. இப்போது, நாம் அவர்களுக்குத் தேவையில்லை. அதே நேரத்தில் எங்கள் நிலைப்பாடு குறித்தும் நிலைமை குறித்தும் பிரதமரிடம் விளக்கிக் கூறியுள்ளேன்” என்றுள்ளார் ஜெகன். 

மே 30 ஆம் தேதி, விஜயவாடாவில் ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ளார் ஜெகன். இதையடுத்து அவர், அந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பிரதமர் மோடியை நேரில் சென்று அழைத்துள்ளார். சந்திப்பின்போது, ஆந்திராவின் ‘சிறப்பு அந்தஸ்து' கோரிக்கை குறித்தும் பேசியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு, தெலங்கானா, ஆந்திராவில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆந்திராவுக்குத் தனியாக அமராவதியில் புதிய தலைநகரம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போதில் இருந்து ஆந்திர தரப்பு, மத்திய அரசிடம் ‘சிறப்பு அந்தஸ்து' கோரி வருகிறது. 
 

.