This Article is From Nov 02, 2018

தலிபான்களின் “காட் ஃபாதர்’ பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான் அமைப்பின் ‘காட் ஃபாதர்’ என்றழைக்கப்படும் மவுலானா சமி-உல்-ஹக் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

தலிபான்களின் “காட் ஃபாதர்’ பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

தலிபான் அமைப்பின் பல பிரிவுகளில் சமி-உல்-ஹக் முக்கிய பொறுப்பை வகித்திருக்கிறார்.

New Delhi:

பாகிஸ்தானின் மதகுருவும், தலிபான் தீவிரவாத அமைப்பின் “காட்ஃபாதர்” என்று அழைக்கப்படும் மவுலான சமி-உல்-ஹக் பாகிஸ்தானின் ராவல் பிண்டி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.

பன்முக திறமை கொண்ட சமி உல் ஹக் 30 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து வெளியேறி 1990-ல் தாருல் உலூம் ஹக்கானியா என்ற பல்கலைக் கழகத்தை ஆரம்பித்தார்.
இந்த பல்கலைக் கழகம்தான் தலிபான் அமைப்பு உருவாகுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது வரை தீவிரவாதிகளை பாதுகாக்கும் நபர் என்று சமி உல் ஹக் அழைக்கப்பட்டு வருகிறார்.

மதகுருவாக இருந்தபோதிலும், அடிப்படை வாதத்தை கடுமையாக ஆதரிக்கும் ஜாமியத் உலூமே இஸ்லாம் என்ற கட்சியின் தலைவராகவும் சமி உல் ஹக் இருந்தார். பாகிஸ்தானில் பல்வேறு பிரச்னைகளின்போது இவரது கருத்து மிக முக்கியமானதாக கருதப்படும்.

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில்ன்போது இம்ரான் கான் கட்சியுடன் சமி உல் ஹக்கின் கட்சி கூட்டணி அமைத்தது. இந்த நிலையில் ராவல் பிண்டி நகரில் அவர் அடையாளம் தெரியாத நபர்களால் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

சில தகவல்கள் அவர் குத்தி கொலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கின்றன. அவரது கொலையால் பாகிஸ்தானில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

.