Read in English বাংলায় পড়ুন
This Article is From Nov 07, 2019

காற்று மாசு காரணமாக கடவுளுக்கும் மாஸ்க் - வாரணாசியில் முகமூடியுடன் அருள் பாலிக்கும் தெய்வங்கள்

“கோயிலில் தெய்வங்கள் முகமூடி அணிந்திருப்பதைக் கண்டு பல பக்தர்களும் முகமூடிகளை அணியத்தொடங்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

Advertisement
விசித்திரம் Edited by

புனிதமான நகரில் கடவுளுக்கும் முகமூடி அணிவித்து நச்சுக் காற்றை தவிர்க்க உதவுகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியும் காற்று மாசிலிருந்து தப்பிக்கவில்லை. தீபாவளிக்கு பின்னர் காற்றின் மாசு பி.எம். 2.5 இந்த வாரம் 500ஐத் தொட்டது. 

நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருவதால் புனிதமான நகரில் கடவுளுக்கும் முகமூடி அணிவித்து நச்சுக் காற்றை தவிர்க்க உதவுகிறார்கள்.

சிக்ரா நகரத்தில் உள்ள புகழ்பெற்ற சிவன் -பார்வதி கோவிலில் சிவன், துர்கா தேவி, காளி தேவி மற்றும் சாய் பாபா ஆகியோரின் சிலைகள் முகமூடிகளால் மூடப்பட்டுள்ளன.

“வாரணாசி என்பது நம்பிக்கைக்குரிய இடமாகும். நாங்கள் எங்கள் சிலைகளை உயிருள்ள தெய்வங்களாக கருதுகிறோம். அவற்றை வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க விரும்புகிறோம். கோடையில் குளிர்ச்சியாக இருக்க சந்தனம் பூசி குளிர்விக்கிறோம். குளிர்காலத்தில் கம்பளிகளை சுற்றி பாதுகாக்கிறோம். காற்று மாசுபாடு காரணமாக முகமூடி அணிவித்துள்ளோம்” கோயில் பூசாரி ஹரிஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.

Advertisement

“கோயிலில் தெய்வங்கள் முகமூடி அணிந்திருப்பதைக் கண்டு பல பக்தர்களும் முகமூடிகளை அணியத்தொடங்கியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது, நகராட்சி ஊழியர்கள் திறந்த வெளியில் குப்பைகளை எரிப்பது போன்ற செயல்களால்தான் இந்த நிலை. மக்கள் தங்கள் வாழ்வியலை மாற்றிக் கொள்ளாதவரை இந்த நிலைமை மாறாது என்று கூறியுள்ளார்.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement