This Article is From Jul 06, 2018

சென்னை விமான நிலையத்தில் 56.7 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

கடந்த இரண்டு நாட்களாக சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் 56.7 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல்

கடந்த இரண்டு நாட்களாக சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதில், மூன்று பயணிகளிடம் இருந்து 56.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் இருந்து வந்த 24 வயது சேக் அப்துல்லா ஜாக்பூர் சாதிக் என்பவரிடம் செய்த சோதனையில், லேப்டாப் பேட்டரியில் தங்கம் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பயணியை கைது செய்த சுங்க அதிகாரிகள், 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,190 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

நேற்று, தோஹாவில் இருந்து வந்த 35 வயது அம்ரினுல் ஆஸ் 225 கிராம் தங்கம் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு, 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கொழும்பூவிலிருந்து வந்த இரண்டு பயணிகளிடம், 13.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 78,000 சவுதி ரியால்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் குடலில் மறைத்து வைத்திருந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, விசாரணை நடைப்பெற்று வருவதாக சுங்க இலாகா துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
 



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.