This Article is From Aug 20, 2020

ஆந்திராவில் சிக்கிய அரசு அதிகாரி: கட்டு கட்டாக பணம், தங்கம் பறிமுதல்!

2006ம் ஆண்டில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்த தந்தை, பணயில் இருந்த போது உயரிழந்த காரணத்திற்காக கருணை அடிப்படையில் வேலை கிடைத்தத்தாக கூறப்படும் அந்த அதிகாரியின் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 

ஆந்திராவில் சிக்கிய அரசு அதிகாரி: கட்டு கட்டாக பணம், தங்கம் பறிமுதல்!

ஆந்திராவில் சிக்கிய அரசு அதிகாரி: கட்டு கட்டாக லஞ்ச பணம், தங்கம் பறிமுதல்!

Hyderabad:

ஆந்திர மாநில கருவூலத் துறையின் உயர் அதிகாரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் குதிரை, சொகுசு வாகனங்கள், ஏராளமான தங்கங்கள், பணம் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவை இன்று போலீசார் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சொத்துக்கள் அனைத்தும் சட்டவிரோதமான முறையில் கருவூலத் துறை அதிகாரியால் வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோப்புகளிலும் கையெழுத்திட அவர் லஞ்சம் பெற்றதாகவும், அப்படி லஞ்சமாக பெற்ற அசையும் சொத்துக்களை தனது ஓட்டுநரின் மாமனார் வீட்டில் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள பாலப்பா என்பவர் வீட்டில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பதுக்கப்பட்டிருந்ததாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, சோதனை நடத்தியுள்ளனர்.

இதில், முறையே 84 கிலோ வெள்ளி மற்றும் 2.4 கிலோ தங்கம், ரூ.15 லட்சம் ரொக்கமாகவும், ரூ.49 லட்சம் வரை வைப்பு தொகையாகவும், ஹார்லி டேவிட்சன் பைக் உள்ளிட்ட பல சொகுசு வாகனங்கள், மூன்று கைத் துப்பாக்கிகள், ஒரு குதிரை உள்ளிட்டவை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

2006ம் ஆண்டில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்த தந்தை, பணியிலிருந்த போது உயிரிழந்த காரணத்திற்காக கருணை அடிப்படையில் வேலை கிடைத்தத்தாக கூறப்படும் அந்த அதிகாரியின் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 

இதுதொடர்பாக அனந்த்பூர் மாவட்ட காவல்துறை தலைமை அதிகாரி சத்ய யேசுபாபு கூறும்போது, இந்த வழக்கு மாநில காவல்துறை தலைமை அதிகாரி கவுதம் சவாங்கின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும், அதன் பின்னர் அது ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

தெலுங்கானாவில் கடந்த வாரம், நிலப்பிரச்சனையை தீர்த்து வைப்பதற்காக கீசாரா தாசில்தார் நாகராஜூ என்பவர் அதற்கான லஞ்சமாக பெற்ற ரூ.1.1 கோடி அதிகாரிகளால் மீட்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் அந்த தாசில்தார் மீது ஏற்கனவே லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், எனினும், ஒவ்வொரு முறையும் அவர் தப்பித்து வந்துள்ளார் என்பது தெரிய வந்தது. 

.