This Article is From Sep 04, 2019

வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை ரூ. 30 ஆயிரத்தை தாண்டியது!!

தங்கத்தின் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்யப்படுவதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை ரூ. 30 ஆயிரத்தை தாண்டியது!!

ஒரு சவரன் தங்கம் ரூ. 30,120 -க்கு விற்பனையாகிறது.

தங்க வர்த்தக வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 30 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இந்திய ரூபாயின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச காரணங்களால் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதுதொடர்பான 8 முக்கிய தகவல்களை பார்க்கலாம்...

1. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்ந்த வந்த நிலையில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ. 32,120-க்கு விற்பனையாகிறது.

2. தங்கத்தின் விலை உயர்வுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததே முக்கிய காரணம். கடந்த ஜூலை மாதம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 68.50-ஆக இருந்த நிலையில் இன்றைக்கு ரூ. 72-யைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 

3. இதேபோன்று அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்டிருக்கும் வர்த்தகப் போட்டியும் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு காரணம். 

4. சீனா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர், காலனிகள், ஸ்மார்ட் வாட்ச், டிவி போன்ற சீன பொருட்களுக்கு 15 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது, அமெரிக்க கச்சா எண்ணெய்க்கு சீனா வரியை விதித்தது போன்றவை சர்வதேச பொருளாதாரத்தை பாதித்துள்ளன.

5. இரு வல்லரசு நாடுகள் போட்டியிட்டுக் கொள்வதால், அதனை சார்ந்து பொருளாதாரத்தில் இயங்கும் மற்ற நாடுகளும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இது தங்கத்தில் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

6. டாலருக்கு நிகரா இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தாலும், உடனடியாக தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை. 

7. மற்ற பொருட்கள், வீடு, நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்திருக்கிறது. இதனால் தங்கத்தின் மீதான தேவை எகிறியுள்ளது.

8. வெளிநாடுகள் பலவும் தங்கத்தை வாங்கி குவித்து வருவதால், சர்வதேச அளவிலும் தங்கத்தின் மீதான டிமாண்ட் அதிகரித்துள்ளது. 
 

.