தங்கத்தின் விலை நேற்றைய தினம் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்ட நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 அதிகரித்து ரூ.28,568க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை எப்போதும் இல்லாத வகையில், கடந்த 2ஆம் தேதி புதிய உச்சத்தை எட்டியது. அதன் முதல் தொடர்ந்து விலை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2.088 அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, சர்வதேச சந்தையில் தங்கத்தில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களே ஆபரணத்தங்கத்தின் விலை உயர காரணம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் உண்டாகிறது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.28,568க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயர்ந்து, ரூ.3,571க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.10 உயர்ந்து, ரூ.47.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்டிகை காலம் நெருங்குவதால் தங்கத்தின் விற்பனையில் எந்த பாதிப்பும் இருக்காது என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும், வரும் நாட்களிலாவது தங்கத்தின் விலை குறையுமா என்பதே நடுத்தர மக்களின் கனவாக உள்ளது.