This Article is From Jan 09, 2020

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்! புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!!

அமெரிக்கா - ஈரான் மோதல் வெடித்ததிலிருந்து தங்கத்தின் விலை உயரத் தொடங்கியுள்ளது. கூடவே பெட்ரோல் டீசல் விலையும் கணிசமான உயர்வை சந்தித்துள்ளது.

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்! புதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலை தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லையென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா - ஈரான் நாடுகள் இடையே ஏற்பட்டிருக்கும் போர்ப்பதற்றம் காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

சென்னையை பொருத்தளவில் ஜி.எஸ்.டி. நீங்கலாக ஒரு பவுன் தங்கம் நேற்றைய விலையை விட ரூ. 272 உயர்ந்து ரூ. 31 ஆயிரத்து 176 க்கு விற்பனையானது. இதேபோன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 34 உயர்ந்து, ரூ. 3,897 க்கு விற்பனையானது. 

இதேபோன்று வெள்ளியும் கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து கிராம் ரூ. 52.10-க்கும், கிலோ வெள்ளி ரூ. 900 அதிகரித்து ரூ. 52,100-க்கும் விற்பனையானது. 

தற்போதைக்கு தங்கத்தின் விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகமாக இருப்பதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். கடந்த வாரம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் வைத்து ஈரான் ராணுவத்தின் தலைமை தளபதி காசிம் சுலைமான் அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தால் கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடியாக ஈராக்கிலுள்ள அமெரிக்க முகாம்கள் மீது ஈரான் ஏவுகனை தாக்குதலை நடத்தியுள்ளது. நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார்.

அடுத்த கட்டமாக அமெரிக்க எடுக்கும் நடவடிக்கையை பொறுத்தே இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தணியுமா அல்லது அதிகரிக்குமா என்பதை முடிவு செய்ய முடியும். 

.