This Article is From Jan 07, 2019

கோல்டன் குளோப் விருதுகள் 2019: விருதுகளை தட்டிச்சென்ற பிரபலங்கள்!

போஹிமேயின் ரஹாப்சோடி மற்றும் கீரின் புக் ஆகிய படங்கள் இந்த ஆண்டு சாதனை!

கோல்டன் குளோப் விருதுகள் 2019: விருதுகளை தட்டிச்சென்ற பிரபலங்கள்!
New Delhi:

உலகம் முழுவதும் உள்ள சினிமா பிரபலங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 2019 ஆம் ஆண்டின் கோல்டன் குளோப் விருதுகள், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரில் கடந்த ஞாயிறு அன்று கோலாகலமாக நடந்தது. இந்த 76 வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழாவை சாண்டிரா ஓக் மற்றும் அண்டி சாம்பேர்கு தொகுத்து வழங்கினர்.

பலரின் எதிர்பார்ப்பைப்போல போஹிமேயின் ரஹாப்சோடி படம் சிறந்த படத்திற்கான விருதை தட்டிச்சென்ற நிலையில் ‘கீரின் புக்' என்ற படம் அதிக விருதுகளைத் தட்டிச்சென்றது. அதிகப்படியான பரிந்துரைகளை ‘வையிஸ்' படம் பெற்றிருந்தது.

2019 கோல்டன் குளோப் விருதுகளை பற்றி அறிந்து கொள்ளவேண்டியவை;
சிறந்த நடிகர் (டிராமா)     : ராமி மாலேக் (போஹிமேயின் ரஹாப்சோடி)
சிறந்த நடிகை (டிராமா)   : கிளேன் கிளோஸ் ( தி வைஃவ்)
சிறந்த நடிகர் (மியூசிகல் / காமெடி) : கிரிஸ்டியன் போல் (வைஸ்)
சிறந்த நடிகை (மியூசிகல் / காமெடி) : ஓலிவ்யா கோலீமேன் ( தி ஃவேவரட்)
சிறந்த துணை நடிகர் : மாஹெர்ஷாலா அலீ (கீரின் புக்)
சிறந்த துணை நடிகை : ரெஜினா கிங் (இஃவ் பீயோலி ஸ்டிரீட் குட் டாக்)
சிறந்த படம் (டிராமா)   : போஹிமேயின் ரஹாப்சோடி
சிறந்த படம் (மியூசிகல் / காமெடி) : கீரின் புக்
சிறந்த இயக்கநர் : அல்வோஃன்சோ குயாரோன் (ரோமா)
சிறந்த படம் (அனிமேட்) :  ஸ்பைடர் மேன் இன்டு தி ஸ்பூடர்- வெர்ஸ்
சிறந்த படம் (வேற்று மொழி)  : ரோமா, மெக்சிகோ
சிறந்த தொலைக்காட்சி தொடர் (டிராமா) தி அமெரிக்கன்ஸ்
சிறந்த தொலைக்காட்சி தொடர் (மியூசிகல் / காமெடி) தி கோமின்ஸ்கை மேத்தோட் (நெட்ஃப்ளிக்ஸ்)
 

மேலும் ஜெஃப் பிரிட்ஜெஸ்க்கு சீசில் பி. டிமிலீ விருது வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து காரோல் புரூனட் விருது என்னும் வாழ்நாள் சாதனையாளர் விருது இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இந்த ஆண்டின் விருது தொலைக்காட்சி துறையில் தனது சாதனைக்காக காரோல் புரூனட்க்கு வழங்கப்பட்டது.
மேலும் நிகழ்ச்சி மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இன்று (திங்கட்கிழமை) இந்தியாவில் ஒளிபரப்பப்படுகிறது.

.