This Article is From May 22, 2019

ஊக்கமருந்து சர்ச்சையில் கோமதி மாரிமுத்து; பறிபோகிறதா தங்கப்பதக்கம்?

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊக்கமருந்து சர்ச்சையில் கோமதி மாரிமுத்து; பறிபோகிறதா தங்கப்பதக்கம்?

இந்திய தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து (30). தமிழகத்தை சேர்ந்த இவர் சமீபத்தில் தோஹாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். 

இந்த நிலையில், போட்டியின்போது மேற்கொள்ள முதற்கட்ட சோதனையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக தெரியவந்துள்ளது என பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டாவது கட்ட ஊக்க மருந்து சோதனையிலும் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து உட்கொண்டது உறுதி செய்யப்பட்டால், கோமதியிடம் இருந்து தங்கப்பதக்கம் பறிக்கப்படுவதுடன், 4 ஆண்டுகள் தடைவிதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், போலந்திலில் இந்திய தடகள வீராங்கனைகளுடன் கோமதி பயிற்சி பெறுவதாக இருந்தது. அது தடை செய்யப்படும் என்றும் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து கூறும்போது, என் வாழ்க்கையில் நான் தடை செய்யப்பட்ட மருந்துகளை பயன்படுத்தியதேயில்லை. ஆசிய தடகளப் போட்டியின்போது நான் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைத்தான் பயன்படுத்தினேன்.

இந்தக் குற்றச்சாட்டை நான் செய்தித்தாளில்தான் பார்த்தேன். அதற்கு முன்னால் இதுபற்றி நான் எதுவும் கேள்விப்படவில்லை. இந்த விவகாரம் குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும் என்று தடகள சம்மேளனத்திடம் கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

.